பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு: திரும்பி பார்க்க வைக்கும் திருப்பூர் மாவட்டம்

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
coronavirus, covid 19, Tirupur, tn news, tn fights corona, covid 19 crisis, திருப்பூர்

திருப்பூர்: பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தாலும், உற்பத்தியாலும், வந்தாரை வாழ வைக்கும் நகரமாக, திருப்பூர் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள், திருப்பூரில் நிரந்தரமாக குடியேறி விட்டனர். இந்தியாவின், 20 மாநிலங்களை சேர்ந்த மக்கள், பனியன் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுடன், நேரடி தொடர்பில் உள்ள திருப்பூரை, கொரோனா எளிதாக தாக்கிவிடுமென, அச்சம் நிலவியது.

நேற்று காலை நிலவரப்படி, 22 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒருவர் மட்டும் குணமடைந்துள்ளார். வீடுகளில், 881 பேர் தனிமையான சூழலும், டில்லி சென்று வந்த, 49 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிக்கப்படுகின்றனர். தன்னார்வலர்களை ஒருங்கிணைத்த மாவட்ட நிர்வாகம், மக்கள் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்கிறது. வியாபாரிகள், விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை, தட்டுப்பாடின்றி சப்ளை செய்கிறது.

வெளிமாநில தொழிலாளருக்கும், அரிசி, பருப்பு, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கி, கவலை போக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில், இளம் ஏற்றுமதியாளர் பங்களிப்புடன், 'கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம்' அமைக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் பாராட்டை பெற்ற இத்திட்டம், இன்று, நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள் நீங்கலாக, 1,165 படுக்கைகள் வசதியுடன், தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், அரசு மருத்துவக் கல்லுாரியில், கொரோனா பரிசோதனைக்கான, 'கலெக் ஷன் பூத்' திறக்கப்பட்டுள்ளது.

சேவா பாரதி, வெற்றி, வேர்கள், 'டிரீம் - 20' ரோட்டரி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள், துாய்மை பணியாளர், ஆதரவற்றவர்களுக்கு, மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றன. மக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கூட, 'டோர் டெலிவரி' செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''தன்னார்வ அமைப்பினர், சமூக வலைதளங்கள் வாயிலாக ஒருங்கிணைந்து, கொரோனா தடுப்பு குழுவாக செயல்படுகின்றனர்.''மக்கள், ஊரடங்கை மதித்து, அவரவர் வீடுகளில் இருந்தாலே, கொரோனாவை விரட்டி விடலாம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
11-ஏப்-202017:20:47 IST Report Abuse
David DS திருப்பூர் கலெக்டர் ஒரு டாக்டர் அவர் ஆரம்பித்து வைத்த ஒரு விஷயம், கிருமி நாசினி சுரங்கப் பாதை. இதன் மூலம் சாதாரண சளி பரவுவதைக் கூட தடுக்க முடியாது, இது மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், இதை எல்லாம் பெரிய சாதனை மாதிரி காட்டிக் கொண்டு விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த டாக்டர் கலெக்டருக்கு, நிதியமைச்சர் பாராட்டாம். இறைச்சிக் கடையிலிருந்து தானே வைரஸ் பரவியதாக தகவல். அப்புறம் அதைக் கூட தடை செய்ய யோசனை வரவில்லையா? இப்படித்தான் நாட்டில் நிர்வாகம் நடக்கிறது
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
09-ஏப்-202012:50:16 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy மக்கள் நீதி மையம் மிக அருமையாக வேலை செய்வதாக கேள்வி முதல்வர் மோடிக்கும் அவர் என்ன செய்யவேண்டும் என அறிவுறை வழங்கியதாகவும்,மற்றும் ஐரோப்பிய நாடுகள்மற்றும் அமெரிக்காவிற்கும் கோவிட்19 ஐ கட்டுப்பாட்டில் கொண்டுவர தலைவர் கமல் அவர்கள் அனைவருக்கும் தன் மனம் திறந்த கடிதங்களை எழுதியதாக கேள்வி.காதில் பூ
Rate this:
Cancel
09-ஏப்-202012:43:06 IST Report Abuse
RAVISHANKAR A Moreover, Bleach/sod.hypochlorite loses its stability
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X