நிதியை நிறுத்தாதீங்க, முழு சம்பளத்தை தருகிறோம்: திரிணமுல் காங்., தலைவர்

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
TMC, West Bengal, MP Funds, pm modi, corona crisis, india fights covid 19, Sudeep Bandopadhyay, திரிணாமுல், காங்கிரஸ், மேற்குவங்கம், எம்பி, சம்பளம், தொகுதி மேம்பாட்டு, நிதி

கோல்கட்டா: கொரோனா நிவாரணத்திற்கு எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்த வேண்டாம் எனவும், தங்களது முழு சம்பளத்தை தருகிறோம் எனவும் திரிணமுல் காங்., லோக்சபா தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கான நிவாரணமாக பிரதமர், ஜனாதிபதி, எம்பி.,க்களின் சம்பளம் அடுத்த ஓராண்டுகளில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் எனவும், எம்பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது எனவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று (ஏப்.,08) வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார். இதில், திரிணமுல் காங்கிரசின் லோக்சபா தலைவர் பந்தோபாத்யாய், பங்கேற்றார்.


latest tamil news


ஆலோசனைக்கு பின்னர் அவர் கூறியதாவது: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரியபடி ரூ.25 ஆயிரம் கோடி நிதியை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்த வேண்டாம் எனவும், எங்களது முழு சம்பளத்தையும் தர தயாராக உள்ளோம் எனவும் கூறினேன். தொகுதி நிதி, அடிமட்ட நிலை வரை உதவுகிறது, அதை நிறுத்தக்கூடாது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்வதற்கு முன்பு,இந்தியா தனது சொந்த தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான சப்ளை இருப்பதை உறுதி செய்த பின்னரே, மற்ற நாடுகளுக்கு மருந்து அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangu - coimbatore,இந்தியா
10-ஏப்-202007:26:42 IST Report Abuse
sangu நிச்சயமாக இது முற்றிலும் நிறுத்த வேண்டும். முதலில் இதற்கு ஒரு புதிய வழிகாட்டு முறையை மத்திய அரசு ஏற்படுத்திட வேண்டும். ஓய்வு பெற்ற நேர்மையான அதிகாரிகள் கொண்ட 4பேர் குழுவை அமைத்து mp க்கள் செய்யப்போகும் திடடத்தை அனுமதிக்கும் பொறுப்பை தரவேண்டும். அந்த அனுமதி கிடைத்தவுடன் அந்த பகுதியின் நாளிதழில் செய்தியாக அறிவித்து பின் வேலையை துவங்க வேண்டும். இது போல் ஊழல் நடக்க வாய்ப்பு வராதபடி வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வந்தால் பலபேர் mp நிதி வேண்டாம் என சொல்லிவிடுவார்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
09-ஏப்-202019:35:15 IST Report Abuse
 Muruga Vel அடிமடியில கைய வெச்சா என்ன பண்ணுவாங்க ..
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
09-ஏப்-202017:37:06 IST Report Abuse
Girija ஒரேடியாக இந்த நிதியை நிறுத்தி விட்டால் ஓட்டுக்கு துட்டு ஒழிந்துவிடும். ஐந்து வருடத்திற்கு இருபத்தி ஐந்து கோடியில் பாதிக்கு பாதி சுருட்டுவதால் நல்ல சம்பளம் பென்ஷன் இலவச பயணம் வருகை படி இலவச மருத்துவம் என்று இருப்பதால் தான் முதலிலேயே ஊழல் தொடங்குகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X