கொரோனா பாதிப்பு: மார்ச்சில் 10 லட்சம்... கடந்த வாரம் மட்டும் 5 லட்சம்!

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தில் 10 லட்சமும், கடந்த ஒரே வாரத்தில் 5 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.latest tamil news


கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் கடந்த ஆண்டு நவ., 17ல் சீனாவின் ஹூபேய் மாகாணத்திலிருந்த, 55 வயதான ஒரு முதியவரைத் தாக்கியது. டிச., 15க்குள் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 27ஐ தொட்டது.
படிப்படியாக, பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா, மார்ச் 5ம் தேதி, ஒரு லட்சத்திற்கும் குறைவாக, வெறும் 96,888 பேரைத் தாக்கியிருந்தது. ஆனால், ஏப்ரல் 2ம் தேதி, 204 நாடுகளில் பரவிய கொரோனா வைரசுக்கு, 10,01,079 பேர் பாதிக்கப்பட்டனர்; 51,383 பேர் உயிரிழந்துள்ளதாக, 'வேர்ல்டு மீட்டர்' என்ற தரவு சேகரிக்கும் அமைப்பு தெரிவித்திருந்தது.


latest tamil news


கொரோனா பாதிப்பு பத்து லட்சத்தை தாண்டி இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால், இன்று மாலை 5:00 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 15,29,968 ஆகவும்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89,426 ஆகவும் உள்ளது. அதேநேரம் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை சற்று ஆறுதல் அளிக்கும்படி, 3,37,276 ஆகவும் உள்ளதாக, 'வேர்ல்டு மீட்டர்' தரவுகள் தெரிவிக்கின்றன.


latest tamil news


ஒரு மாதத்தில் 10 லட்சம் பேருக்கு உறுதியான கொரோனா தாக்கம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், புதிதாக ஐந்து லட்சம் பேரை தாக்கியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஒரு வாரத்தில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மருத்துவ வசதிகள் குன்றியுள்ள, 15க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளையும் கொரோனா தாக்கத் துவங்கியுள்ளது. இதனால் அடுத்து வரும் வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.


latest tamil news


இந்தியாவில், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், பாதிப்பு சற்று அதிகரித்திருந்தாலும், ஊரடங்கு உத்தரவால் கொரோனா பரவல் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
10-ஏப்-202002:58:19 IST Report Abuse
Anbu Tamilan Great thinking by our respec PM on time which is really saving our lives. We should follow the rules of the Govt & Health Department sincerely. Excellent PM & all other Ministry of Health and all the Chief Ministers of India and the Police, Health & servicing departments. They are working very hard to taking the risk of their lives. A GREAT ROYAL SALUTE TO ALL . PROUD TO BE AN INDIAN WITH WONDERFUL PRIME MINISTER. JAI HIND
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
10-ஏப்-202002:51:01 IST Report Abuse
Anbu Tamilan In India because of Tajlib Jamath idiots d the disaster else it will be less than 1000. All stupid Muslims should be punished. fools
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X