பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா; 8 பேர் பலி

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
Tamilnadu, CoronaVirus, BeelaRajesh, CoronaCase, தமிழகம், கொரோனா, வைரஸ், பீலாராஜேஷ், பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,09) மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், 1 தனியார் மருத்துவமனை டாக்டருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேரும், அரசு கண்காணிப்பில் 213 பேரும் உள்ளனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 32,896 பேர். இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 7,267 பேர். கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் தமிழகத்தில் உயிரிழப்பு 8 ஆக உள்ளது. இதுவரை 27 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

ரேபிட் சோதனைக்கான உபகரணங்கள் இன்றிரவு தான் வருகிறது. அது நடைமுறைக்கு வந்ததும் 30 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும். நோயின் தீவிரத்தை உணர்ந்து அரசின் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
10-ஏப்-202019:23:38 IST Report Abuse
SENTHIL இங்கே டெல்லி மாநாடு நடத்த அனுமதி ஏன் கொடுக்கப்பட்டது என கேள்வி மேல் கேள்வி எழுப்பும் அன்பர்கள், காஸ்மீரில் சமீபத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த, தடை செய்யப்பட்ட JeM இயக்க நபரின் இறுதி ஊர்வலத்தில், ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் பற்றி அச்சம் இல்லாமல் திரளாக கலந்து கொண்டவர்கள் பற்றி கண்டனம் தெரிவிக்க முடியுமா
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-ஏப்-202019:23:23 IST Report Abuse
மலரின் மகள் எங்கோ சரிசெய்யப்படவேண்டிய நிலையில் நிர்வாகமிருக்கிறது. எத்துணை மணிநேரம் தனிநபராக வேலை செய்கிறோம் என்பதல்ல. எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறோம் என்பதே முக்கியம். அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் வேலையை ஒதுக்கி விட்டு மக்கள் நலப்பணிகள் இலவசம் ஓட்டுக்கள் என்று கவனம் செலுத்துகிறார்களா. ஒருகிலோ எடையில் அரைகிலோ தான் பையில் இருக்கிறது என்று பரவலாக செய்திகள் வேறு. சிலர் காரியத்தில் கண்ணாக இருக்கிறார்கள் போலும். தெளிவாக சொல்லி விடுங்கள் மிரட்டும் தொனியில் கூட, அரசு உடனடியாக போர்கால நடவடிக்கையாக மக்கள் சுற்றுவதை கட்டுப்படுத்துங்கள், வீட்டிற்குள் முடங்குவதை அடுத்து குறைந்தது இரண்டு வாரங்கள் அல்லது கொரானாவின் தொற்றுக்கள் முழுதும் குறைக்கப்படும்வரை அதை செயல்படுத்துங்கள் என்று. தொடர்ந்து நாடு முடக்கப்படுவது அல்லது மாவட்டங்கள் மாநிலங்கள் முடக்கப்படுவது உங்கள் அரசின் தோல்வியிலும் உங்களுக்கான வெற்றியை மறைப்பதிலும் வரும் தேர்தலில் கொண்டு செல்லும் என்று. அது போல கொரானாவில் மற்ற மாநிலங்களை விடமிக சிறப்பாக செயல்பட்டு ஊரடங்கை முதலில் தளர்த்தி தொழில் உற்பத்திக்கு முதலாவது மாநிலமாக மாறினால் கிடைக்கும் பலாபலன்களை சொல்லி புரியவையுங்கள். ஒன்றுபட்ட அமைச்சக அதிகார அரசு அலுவலர்களை வைத்து தான் வெல்ல முடியும் என்பதை உணர்த்துங்கள். முடியாது என்றால் அரசிற்கு புரியவைப்பதற்கு நம் கையில் இருப்பது ராஜினாமா என்ற ஆயுதம் தான்.
Rate this:
Cancel
poonguzhali - singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202018:18:20 IST Report Abuse
poonguzhali இப்போ நடந்த நிகழ்வினால் மட்டும் கேள்வி இல்லை, இன்னும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாதவர்களே சக மனிதர்களை பீதிக்கு உட்படுத்துகிறார்கள். மேலும் ஷாஹிம்பக்ஹ் உச்ச நீதிமன்றம் உத்தரவிற்கும் பிறகும் கலையவில்லை... இந்நிலையில் மார்ச் ல் 50 நபருக்கு மேல் கூடகூடாது என்று உத்தரவு இருந்தும் மீறி பங்கேற்றவர்கள்... இந்த இந்த நாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தலை பின்பற்றாதது சவாலான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இன்று அவரவர் குடும்பத்திற்காகவும், சந்ததிக்காகவும் நல்லுணர்வினை வளர்ப்போம்.. வெறுப்பினை எதிர்ப்பினை அன்பினால் வெல்வோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X