பொது செய்தி

இந்தியா

கொரோனாவில் இருந்து குடும்பத்தாரை காக்க காருக்குள் வாழும் டாக்டர்கள்

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
போபால்: கொரோனா வைரஸ் தொற்றால் குடும்பத்தார்கள் பாதிப்படையாமல் இருக்க, மத்திய பிரதேசத்தை சேர்ந்த இரு டாக்டர்கள் தங்களுடைய காரில் தனிமைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களை எளிதில் வைரஸ்
Bhopal, Doctor, Car, Covid-19, Corona, Coronavirus, India, Corona warriors, கொரோனா, வைரஸ், கார், குடியிருக்கிறார்கள், டாக்டர்கள், போபால்

போபால்: கொரோனா வைரஸ் தொற்றால் குடும்பத்தார்கள் பாதிப்படையாமல் இருக்க, மத்திய பிரதேசத்தை சேர்ந்த இரு டாக்டர்கள் தங்களுடைய காரில் தனிமைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களை எளிதில் வைரஸ் தொற்றிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களின் நலன் கருதி, சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த இரு டாக்டர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் தனித்தனியாக ஒரு இருப்பிடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் அந்த இருப்பிடம் 4 சக்கரங்களை கொண்டதாக இருந்தது.


latest tamil news



ஆம், இரு டாக்டர்களும் தங்கள் காரிலேயே தினமும் குடியிருந்து வருகின்றனர். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஒரே அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும், சச்சின் நாயக் மற்றும் சச்சின் பட்டிதர் ஆகிய இரு டாக்டர்களும், தங்கள் கார்களில் பல வாரங்களாக வசித்து வருகின்றனர். தினமும் பகல் நேர பணி முடிந்ததும், தங்கள் வீடுகளுக்கு அருகில் சிறிது நேரம் நடந்து தங்கள் காரில் ஓய்வெடுக்கின்றனர். காரில், புத்தகங்கள், பெட்ஷீட்கள், உடைகள், மடிக்கணினி, சோப்பு, டியோடரண்ட், சீப்பு, ஷேவிங் கிட் மற்றும் மெத்தை போன்றவைகள் இடம் பெற்றுள்ளன. ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பது, குடும்பத்தார்களுடன் தொலைபேசியில் உரையாடுவது, பின் இருக்கையில் உறங்குவது என அன்றாடம் இதையே பின்பற்றுகின்றனர்.


latest tamil news


இது தொடர்பாக சச்சின் நாயக் கூறுகையில், ‛‛எனக்கு 3 வயதுள்ள குழந்தை உள்ளது. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான தனிமை வார்டில் பணிபுரியும் நான், தினமும் 100க்கும் மேற்பட்டோர்களை சந்திக்கிறேன். இதனால் குடும்பத்தார்களுக்கு கொரோனா பரவாமல் பாதுகாப்பதற்கு தனி காரில் வாழ முடிவு செய்தேன்,'' என்றார். சச்சின் பட்டிதரின் வீட்டில் முதியவர்கள் இருப்பதால், அவர்களின் பாதுகாப்பிற்கு தன் காரில் வாழ்ந்து வருவதாக கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஏப்-202017:24:41 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) பல உயிர்களை காக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் புண்ணியம் செய்தவர்கள் வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-ஏப்-202020:19:19 IST Report Abuse
தாண்டவக்கோன் இந்த நல்ல உள்ளங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கணும்
Rate this:
Cancel
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஏப்-202020:08:39 IST Report Abuse
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) நடிகர் நடிகைகளுக்கு பயன் படுத்தும் கேரவன் போல் arrange பண்ணி கொடுக்கலாம் ?? அல்லது நம்ம நாட்டு producer ,நடிகர்கள் /நடிகைகள் இந்த மாதிரி ரியல் ஹீரோஸ் இலவசமாக கொடுக்க சொல்லலாம் ???
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-ஏப்-202020:17:19 IST Report Abuse
தாண்டவக்கோன்15 லெச்சம் ரூவா கோட்டெவும் (coat) போத்திக்க குடுக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X