விதிமீறலுக்காக மன்னிப்பு கோரினார் ஆஸி., அமைச்சர் டான் ஹாரிசன்

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கான்பெரா : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாண அமைச்சர் டான் ஹாரிசன் விதிமுறைகளை மீறி தனது கடற்கரை இல்லத்திற்கு சென்றதால் வந்த பிரச்னைகளையடுத்து மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகின.கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் கொரோனாவின் தாக்கத்திற்கு பல உயிர்கள் பலியானது. ஆயிரக்கணக்கில் மக்கள் நோய் தொற்றால்

கான்பெரா : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாண அமைச்சர் டான் ஹாரிசன் விதிமுறைகளை மீறி தனது கடற்கரை இல்லத்திற்கு சென்றதால் வந்த பிரச்னைகளையடுத்து மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகின.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் கொரோனாவின் தாக்கத்திற்கு பல உயிர்கள் பலியானது. ஆயிரக்கணக்கில் மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் ஸ்காட் மோரிசன் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய மாகாணங்களின் பிரதமர் மற்றும் அமைச்சர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil newsதொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவுதலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வர தடை நீடிக்கப்பட்டது. இதனால் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட மக்கள் வீதிகளில் வர வேண்டாம். வீட்டுக்குள்ளேயே கொண்டாடுங்கள். ஈஸ்டரை காரணமாக வீதிகளில் மற்றும் நகரங்களில் கூட்டம் கூடுவதை தவிருங்கள் எனவும் சில நாட்களுக்கு முன் பிரதமர் மோரிசன் கூறியிருந்தார். ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்களிலும் இந்த எச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் அமைச்சர் டான் ஹாரிசன் ஈஸ்டர் பண்டிகைக்கான கொண்டாட்டத்தை மத்திய கடற்கரையான பேர்ல் பீச்சில் உள்ள தனது மற்றொரு இல்லத்தில் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியானதாக அந்நாட்டின் ஊடகங்கள் கூறுகின்றன. நியூ சவுத் வேல்ஸ் (NSW)மாகாணத்தின் பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் விதிமுறைகளை மீறி டான் ஹாரிசன் வெளியே சென்றுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

மாகாணத்தின் போலீஷ் கமிஷனர் மிக் புல்லர், விதிமீறலுக்கு உரிய காரணங்களை ஹாரிசன் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 1000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் டான் ஹாரிசன் கொரோனா வைரஸ் தடுப்பு நடைமுறை காலங்களில் அரசு உத்தரவை மீறி சென்றதற்கு மன்னிப்பு கோரினார் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு குறித்தும் பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியனும், கமிஷனர் மிக் புல்லரும் அன்றாடம் செய்தியாளர்களை சந்தித்து பேசுவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202005:04:44 IST Report Abuse
sathiya narayanan நம்ம நாட்டில் அமைச்சர் விதி மீறினால் அதை விதியாக மாற்றி அரசு ஊழியர்கள். அதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் தூத்துக்குடியில் பாதுகாப்பு கவசங்கள் சரி இல்லை என்று கூறிய மருத்துவரை திருவாருக்கு மாற்றிவிட்டு, அதை ஆதரிச்சு டீன் நிர்வாக கரணம் என்று விளக்கம். அந்த டீக்குக்கும் இந்த நிலை வரும் என்று உணராமல். அரசு அதிகாரிகள் இருக்கும்வரை நாம் கொடுத்து வச்சது அவ்வளவு தான்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-ஏப்-202021:28:07 IST Report Abuse
Sanny நமக்கு ஆண்டியும் ஒன்று தான், அரசனும் ஒன்றுதான். மறப்போம் மன்னிப்போம்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X