காஷ்மீர் மக்களுக்கு 4ஜி சேவை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 4ஜி இணைய சேவை அளிக்க வேண்டுமென கோரிய மனு மீது மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



ஜம்மு காஷ்மீரில், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள், கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள், கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், தினசரி புதுப்பிப்புகளை அணுக முடியாததால், மொபைல் இணைய தரவு சேவைகளை 4ஜி வேகத்திற்கு மீட்டெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவின் சார்பாக வழக்கறிஞர் ஷதன் பரசாத் ஆஜரானார்.

ஊடக வல்லுநர்கள் அதன் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் பரஞ்சோய் குணா தகுர்தா அறக்கட்டளை மூலம் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டுள்ளதாவது:
“ஜம்மு-காஷ்மீரில் உள்ள குடிமக்கள் ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள இந்தியர்களுக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளை இழக்கக்கூடாது. அதாவது பயனுள்ள மற்றும் விரைவான ஆன்லைன் சேவையை இழக்க கூடாது, இது கொரோனாவுக்கான எதிரான போராட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத கருவி ஆகும்.

மொபைல் இணைய வேகம் தடை செய்யப்படக் கூடாது. ஜம்மு காஷ்மீரில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை அத்தகைய உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.


latest tamil news



ஆகஸ்ட் 2019 இல் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில ஏழு மாதங்களுக்கும் மேலாக இணையம் தடை செய்யப்பட்டது. அவ்வகையில் இணையத்தை கட்டுப்படுத்தும் அரசாங்க உத்தரவை ரத்து செய்யவேண்டும்' இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஒரு அமர்வு காணொலிக் காட்சி மூலம் அரசாங்கத்திற்கு முறையான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
15-ஏப்-202009:54:07 IST Report Abuse
Milirvan ///காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து/// கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது தான் சரி.. மக்களின் சிறப்பு அந்தஸ்து ரத்து என்று கூறியிருப்பதை நீதிமன்றம் ஆட்சேபிக்க வேண்டும்..
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
10-ஏப்-202008:27:28 IST Report Abuse
அசோக்ராஜ் இத்தாலிய அடிமைகள் எப்பாடு பட்டாவது மோடி அரசுக்கு இடைஞ்சல்கள் ஏற்படுத்துகின்றனர்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
10-ஏப்-202008:10:18 IST Report Abuse
sundarsvpr நிர்வாகம் சம்பந்தப்பட்டது. காஸ்மீர் மாநிலம் தொடர்பாக சமீபத்திய மத்திய அரசு நடவடிக்கை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்போது அரசியல் அவசியம் இல்லை. இதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X