மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு குறைகூறிய மருத்துவர் சஸ்பெண்ட் ; சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் என்-95 மாஸ்க் போன்ற மருத்துவ உபகரணங்கள் குறித்து குறைகூறிய மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் பல நாடுகளிலும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் ஆர்டர் செய்யப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் என்-95 மாஸ்க், வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஆந்திராவின் நர்சிபட்னம் பகுதியில் உள்ள சுதாகர் ராவ் என்ற மருத்துவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது அரசின் குறைந்தபட்ச பொறுப்பு எனவும் கூறினார். இதையொட்டி அவரை மாநில அரசு பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டது.


latest tamil newsஇதற்கு ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது : கொரோனா நோய்க்கு எதிராக மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். மக்களை பாதுகாக்கும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக என் -95 மாஸ்க், கையுறைகள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் இல்லை என நர்சிபட்னம் மருத்துவமனையின் டாக்டர் சுதாகர் ராவ் என்பவர் குற்றம் சாட்டினார். இதை தீர்க்க வேண்டிய ஒய்.எஸ்.ஆர் அரசு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
மாநிலத்தில் உள்ள முன்னனி மருத்துவர்கள் இது போன்று அவமதிக்கப்பட்டால் என்னவாகும். மற்றவர்களின் உயிரை பாதுகாப்பதற்காக தங்களுக்கு உள்ள ஆபத்தை உணர்ந்தும் பல மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இது போன்ற காலகட்டத்தில் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பையும் பராமரிப்பையும் செய்யப்பட வேண்டும். பின்னர், ஒய்.எஸ்.ஆர் தலைவர்கள் டாக்டருக்கு தெலுங்கு தேசம் கட்சியுடன் உடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறினர், மேலும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பு டி.டி.பி மூத்த தலைவர் அய்யன்னா பத்ருதுவுடன் கணிசமான நேரத்தை செலவிட்டார். இவ்வாறு கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
10-ஏப்-202009:37:38 IST Report Abuse
Pannadai Pandian நாயுடு சரியில்லை.......மாமனார் NTR கு எதிராக சாதி செய்த காங்கிரஸ் கூட்டத்துடனேயே சமரசம் செய்து கொண்டு பாஜக முதுகில் குத்தினார் மாமனாரின் முதுகிலும் குத்தினார். மொத்தத்தில் துரோகி. இதனால் தான் சந்திரசேகர் ராவ் இவரை விட்டு விலகினார். ரோஜாவும் இவரை விட்டு விலகினார்.
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
10-ஏப்-202006:10:23 IST Report Abuse
Subburamu Krishnaswamy Government servants must follow official decorum. They should not show any sincerity to any political bosses. Only authorised persons alone can meet the media and not all staff. The doctor might have taken this issue to his superiors and not to TDP party.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-ஏப்-202005:51:52 IST Report Abuse
D.Ambujavalli தமிழகத்தில் இவ்வாறு குறை கூறிய டாக்டர் உடனடியாக மாற்றல் செய்யப்பட்டார் தங்களுக்கு ஜால்றா அடிக்காதவர்களை தண்டிப்பதில் எல்லா அரசும், அரசியல்வியாதிகளும் ஒன்றுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X