பிறந்த குழந்தைகளை கொரோனாவிலிருந்து காக்க சிறப்பு மாஸ்க்

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020
Share
Advertisement
Paolo Hospital, face mask, new born baby, coronavirus, covid-19, thailand, Bangkok, corona, world fights corona, Bangkok hospital

பாங்காக்: கொரோனா வைரசிலிருந்து பிறந்த குழந்தைகளை பாதுகாக்க தாய்லாந்து மருத்துவனை ஒன்று பிரத்யேக மாஸ்க்கை தயாரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலக பலி 90,900 ஆக உள்ள நிலையில், மொத்த பாதிப்பு 15.42 லட்சமாக உள்ளது. வைரசிலிருந்து பாதுகாக்க அனைவரும் மாஸ்க் அணியவும், கைகளை சோப் போட்டு கழுவவும் பரிந்துரை செய்யப்படுகிறது. அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


latest tamil news




பெரியவர்கள், குழந்தைகள் மாஸ்க் அணிந்து வரும் நிலையில், தாய்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்று, பிறந்த குழந்தைகளுக்கு பிரத்யேக மாஸ்க்கை உருவாக்கி உள்ளது. சமுத் பிராகர்ன் மாகாணத்தில் உள்ள பவோலோ மருத்துவமனை தாங்கள் உருவாக்கிய சிறப்பு மாஸ்க்கை, பிறந்த குழந்தைகளுக்கு அணிவித்து புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து, லைக்ஸ், ஷேர்களை குவித்ததால் வைரலாக பரவியது.

தாய்லாந்தில் 2,423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 32 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X