பொது செய்தி

இந்தியா

கோர்ட்டில் ஆஜரான கைதிக்கு தொடர் இருமல்: கொரோனா பீதியில் நீதிபதி

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

லூதியானா: நீதிமன்றத்தில் கைதி ஒருவர் இருமியதை அடுத்து நீதிபதிகள் போலீசார் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திகொண்டனர்.



latest tamil news



பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாகனம் ஒன்றை திருடியதாக 25 வயது மதிக்க தக்க சவுரவ் ஷேகல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்ட போது, தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தார். உடனே நீதிபதி அவரை மருத்துவ பரிசோதனை நடத்தும்படி உத்தரவிட்டதுடன் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


latest tamil news



இதனிடையே திருடனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கைதி நீதிமன்றத்தில் இருமியதை அடுத்து நீதிபதிகள்,அங்கு பணியில் இருந்தஊழியர்கள் மற்றும் அவருக்கு பாதுகாப்பு அளித்த 17 போலீசார் தங்களை தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-ஏப்-202004:32:02 IST Report Abuse
வெகுளி அடேய்....ஜட்ஜஐயாவையே தனிமை சிறைக்கு அனுப்பிட்டியே...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202002:13:34 IST Report Abuse
Rajagopal நீதிபதி, பீதியாகி விட்டார்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
09-ஏப்-202022:49:26 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இந்த அளவுக்கு கொரோனா சகஜமாயிருச்சி தாங்க்ஸ் கோ டு தப்லிகி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X