பொது செய்தி

இந்தியா

ராமாயணத்தால் அடித்தது 'ஜாக்பாட்'; நாட்டிலேயே தூர்தர்ஷன் தான் 'டாப்'

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த வாரத்தில் நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட சேனலாக, தூர்தர்ஷன் மாறியுள்ளதாக பி.ஏ.ஆர்.சி., தெரிவித்துள்ளது. ராமாயணம், மகாபாரத தொடர்களால் தூர்தர்ஷன் பார்வையாளர்கள் 40 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக எபிசோடுகள் எடுக்காததால், பல டிவி சேனல்களும் தங்களது பழைய நாடகங்களை
doordarshan, DD, ramayan, lockdown, BARC, covid-19, corona, coronavirus, corona in India, corona update, Mahabharat, TV viewers, ராமாயணம்,தூர்தர்ஷன்

புதுடில்லி: கடந்த வாரத்தில் நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட சேனலாக, தூர்தர்ஷன் மாறியுள்ளதாக பி.ஏ.ஆர்.சி., தெரிவித்துள்ளது. ராமாயணம், மகாபாரத தொடர்களால் தூர்தர்ஷன் பார்வையாளர்கள் 40 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக எபிசோடுகள் எடுக்காததால், பல டிவி சேனல்களும் தங்களது பழைய நாடகங்களை டிவி.,யில் ஒளிபரப்பின. தூர்தர்ஷனும், ராமயணம், மகாபாரத தொடர்களை கையில் எடுத்தது. 1987 - 1988ம் ஆண்டுகளில் தூர்தர்ஷனில் ஞாயிறு காலை ஒளிபரப்பான இத்தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற தொடர்கள். 55 நாடுகளில் 65 கோடி பேர், அந்த நேரத்தில் இந்த தொடர்களை பார்த்தனர்.


latest tamil newsஇந்நிலையில், கடந்த வாரம் நாட்டில் அதிகம் பார்த்த சேனலாக, தூர்தர்ஷன் மாறி உள்ளது. இதனை டிவி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பி.ஏ.ஆர்.சி.,) தெரிவித்தது. குறிப்பாக காலையும், மாலையும் ஒளிபரப்பான ராமாயணத் தொடரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். இதனால் பார்வையாளர் சதவீதம் 40 ஆயிரம் சதவீத வளர்ச்சியை தூர்தர்ஷன் பெற்றுள்ளது. மேலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மகாபாரதம், சக்திமான், புனியாத் தொடர்களையும் மக்கள் விரும்பி பார்த்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chockalingam pragasam - singapore,சிங்கப்பூர்
15-ஏப்-202005:16:01 IST Report Abuse
chockalingam pragasam இராமாயணமும் மகாபாரதமும் ஒரு மருத்துவ படைப்புக்கள். அதிலுள்ள கதைகள் அனைத்தும் மருத்துவத்தை விளக்குவதற்கான உருவகப்படுத்தப்பட்டவை. இன்று கதைகள்தான் பிரதானமாக போற்றப்படுகிறது. அதிலுள்ள விஷயங்களில்லை. கதைகளின் ஒவ்வொரு வரியும் ஆராயப்படவேண்டிய ஒன்று. மந்திரங்களை சொல்கின்றோம். யாராவது அதன் விளக்கம் என்ன என்று யோசனை செய்கின்றார்களா? இல்லை. மந்திரத்தில் மாங்காய் காய்த்துவிடும் என்ற நம்பிக்கை. அர்த்தம் புரியாமல் இராமாயணமும் மகாபாரதமும் பார்த்து என்ன பிரயோஜனம்.
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
12-ஏப்-202022:31:16 IST Report Abuse
Arasu ராமாயணம் என்பது கற்பனை காவியம் உண்மை கிடையாது ராமன் என்ற ஒருவன் உயிருடன் வாழ்ந்தான் என்பது இமாலய பொய்
Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
13-ஏப்-202012:28:04 IST Report Abuse
RameshMeaning of ITHIHAAS is Collection of History Events and changed by so called Western group as MYTHOLOGICAL in last 300 years and educated through MASCULISM (Telling lie through education tem and making Truth as Lie and Lie as Truth)...Ramayana period is 12000 to 14500 years...Half baked knowledge people...
Rate this:
Ayappan - chennai,இந்தியா
14-ஏப்-202015:33:30 IST Report Abuse
Ayappanஅரசு என்பவரே இமாலய பொய் .... இன்னும் 100 வருடத்தில் .... ஆனால் ராமன் எவர் கிறீன்...
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
15-ஏப்-202011:56:55 IST Report Abuse
Sridharஏம்பா? இப்போ அதுவா முக்கியம்? அதுலே உள்ள நீதிக்கதைகள் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றவில்லையா? எவ்வளவு விஷயங்கள் அந்த இதிகாசங்களில் பொதிந்துள்ளன அவையெல்லாம் கற்பூர வாசனை ஆயிற்றா?...
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
12-ஏப்-202018:05:55 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ராமாயணமும் மகாபாரதமும் வெறும் கதைகள் அல்ல. அவை நமது முன்னோர்களின் வாழ்க்கை. அதன் தொடர்ச்சிதான் நமது இன்றைய வாழ்க்கை.இது நமது ரத்தத்தில் கலந்தது. எனது குழந்தைகள் போஸ்ட் கிராஜுவேட்ஸ் முடித்தவர்கள் விரும்பிப் பார்க்கும் தொடர்கள் இப்போது ராமாயண மகாபாரதம் காவியங்கள் தான்.ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் என்னிடம் சந்தேகங்களை கேட்கும்போது தெரிகிறது நாமெல்லாம் அந்த முன்னோர்களின் வழி வந்தவர்கள் தான் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X