சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊர் சுற்றினால் இனி 6 மாதம்'கம்பி'1.24 லட்சம் பேர் மீது நடவடிக்கை

Updated : ஏப் 11, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், வரும், 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில், தமிழகம், தேசிய அளவில், இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும், மக்களுக்கு, அந்த வைரஸ் குறித்த கொடூரம் புரியவில்லை; வெட்டித்தனமாக ஊர் சுற்றி வருகின்றனர். இதனால், போலீசார், சட்ட ரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்கி உள்ளனர்.எவரேனும், உயிருக்கு
police,TN_Together_AgainstCorona,Corona,TNAgainstCorona,TNGovt,coronavirus,TamilNadu,Covid19,StayHome, Quarantine,lockdown,

சென்னை : 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், வரும், 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில், தமிழகம், தேசிய அளவில், இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும், மக்களுக்கு, அந்த வைரஸ் குறித்த கொடூரம் புரியவில்லை; வெட்டித்தனமாக ஊர் சுற்றி வருகின்றனர். இதனால், போலீசார், சட்ட ரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்கி உள்ளனர்.எவரேனும், உயிருக்கு ஆபத்தானது; மற்றவர்களுக்கும் பரவக் கூடியது என்பதை அறிந்தோ அல்லது கவனக் குறைவாகவோ, கிருமிகளை பரவ வைப்பது, சட்டப்படி குற்றம். அதற்கு, ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

அதற்கு, இந்திய தண்டனை சட்டம், 269 பிரிவு வழிவகை செய்கிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவை மீறுவோர்கள், இந்த சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில், நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக, போலீசார், 1 லட்சத்து, 14 ஆயிரத்து, 832 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளின் அடிப்படையில், ௧ லட்சத்து, ௨௪ ஆயிரத்து, ௬௫௭ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஆறு மாதம், சிறைத்தண்டனை கிடைக்க வகை செய்யும், இந்திய தண்டனை சட்டம், ௨௬௯வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து, 97 ஆயிரத்து, 146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 38.54 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள், போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளன.இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், அனைத்து பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன; தட்டுப்பாடு இல்லை. அப்படி இருக்கையில், சிலர் தேவையின்றி, வசிப்பிடத்தில் இருந்து, 2 கி.மீ., துாரத்திற்கு அப்பால், வெளியே சுற்றுகின்றனர். அதுபோன்ற நபர்களை கைது செய்து, சிறையில் அடைக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
10-ஏப்-202022:21:18 IST Report Abuse
g.s,rajan Many two wheeler riders are simply loitering the streets with out any purposand simply wasting the petrol and also waste their precious time. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
10-ஏப்-202016:06:06 IST Report Abuse
Baskar சொல்ல கூடாது.செயலில் காட்ட வேண்டும். ஒரு ஆயிரம் பேரை போடுங்கள் மறுபடி வருவதற்கு எவனும் முன் வரமாட்டான்.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
10-ஏப்-202012:59:15 IST Report Abuse
Ravichandran Narayanaswamy தமிழ்நாடு சாராயபாட்டெல்களை காப்பாற்றிவிட்டு நெல் மூட்டைகளை நனையவிட்டதே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X