கொரோனா அச்சம்: கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்த பயணிகள்

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020
Share
Advertisement

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, பல உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வேளையிலும் சில வியப்பான, நகைப்புக்குள்ளான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணமே உள்ளன. இது சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவனம் பெறுகிறது. சமீபத்தில் இந்தோனேஷியாவில் இதுபோன்ற ஓர் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.



latest tamil news



இந்தோனிஷிய கப்பல் ஒன்று சுலாவேசி தீவுக்கும் இந்தோனேஷிய போர்னோவுக்கும் இடையே பயணம் மேற்கொண்டது. இதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர். திடீரென கப்பலில் பயணித்த பயணிகளில் மூவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது எனத் தகவல் வெளியாக, மற்ற பயணிகள் பீதி அடைந்தனர். இதனையடுத்து ஃபுளோரஸ் தீவின் மவுமியர் துறைமுகத்தில் அவசரமாக நிறுத்த கேப்டன்களால் தீர்மானிக்கப்பட்டது. அதனால் கப்பல் மவுமியர் துறைமுகம் நோக்கி விரைந்தது.
கொரோனா பாதிப்படைந்த பயணிகள் யார் எனத் தெரியாத நிலையில் இதர பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து, கப்பல் துறைமுகத்தை அடையும் முன்னரே உயிர் காக்கும் சூட்டை அணிந்து கடலில் குதித்து துறைமுகத்தை நோக்கி நீந்தத் தொடங்கினர். இதனையடுத்து கிட்டத்தட்ட அனைத்து பயணிகளும் குதிக்கத் தொடங்க, கப்பல் துறைமுகத்தை அடைந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட பயணிகள் மூவரும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X