பயங்கரமான ஆளுப்பா: மோடிக்கு டிரம்ப் புகழாரம்

Updated : ஏப் 11, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (60)
Share
Advertisement
Modi,Trump,India,US,America,covid19,coronavirus,மோடி,டிரம்ப்,இந்தியா,அமெரிக்கா

வாஷிங்டன் : 'எங்கள் கோரிக்கையை ஏற்று, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மருந்தை அளிக்க முன் வந்த, இந்தியப் பிரதமர், நரேந்திர மோடியின் உதவி எப்போதும் மறக்க மாட்டோம். பயங்கரமான ஆளுப்பா அவர்!' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி இந்நிலையில், மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும், ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்து, கொரோனோ நோயாளிகளுக்கு பலன் அளித்துள்ளது. அதையடுத்து, இந்த மருந்து குறித்தே, அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகம் பேசி வருகிறார்.

இந்த மருந்தை, உலகிலேயே அதிக அளவில், இந்தியா தயாரிக்கிறது. உலகெங்கும் இந்த மருந்தின் மொத்த ஏற்று மதியில், 70 சதவீதம், இந்தியாவில் இருந்து செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பால், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிக்கு, இந்தியா சமீபத்தில் தடை விதித்திருந்தது.அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியுடன், தொலைபேசியில், டிரம்ப் சமீபத்தில் பேசினார். அப்போது, இந்த மருந்தை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 'கோரிக்கையை ஏற்று மருந்தை அனுப்பாவிட்டால், பதிலடியை சந்திக்க நேரிடும்' என, டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.இதற்கிடையே, பாரசிட்டமால், ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்பட, 14 மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை, மத்திய அரசு சமீபத்தில் விலக்கி கொண்டது. அமெரிக்காவுக்கு, 2.9 கோடி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கு நன்றி தெரிவித்து, டிரம்ப் கூறியுள்ளதாவது: எங்களுடைய கோரிக்கையை ஏற்று, வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், மருந்துகளை அனுப்பி வைத்துள்ளதற்காக, பிரதமர், நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர், பயங்கரமான ஆளு. இந்த உதவியை எப்போதும் மறக்க மாட்டோம்.

மிகவும் இக்கட்டான நேரத்தில், நண்பர்களிடயே, நெருங்கிய ஒத்துழைப்பு தேவை. எங்களுக்கு உதவிய இந்தியாவையும், இந்திய மக்களையும் மறக்க மாட்டோம். பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு மட்டும் சிறந்த தலைவர் இல்லை. இந்த கொரோனாவுக்கு எதிரான போரில், மனித குலத்துக்கே தலைவராகியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.


பிரேசில் அதிபரும் பாராட்டு


அமெரிக்காவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும், இந்த மருந்தை தரும்படி, கோரிக்கை விடுத்தன. தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அதிபர் ஜெயிர் போல்சனரோவும், மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ராமாயண கதையை சுட்டிக் காட்டி, உதவும்படி கேட்டிருந்தார். இந்தாண்டு ஜனவரியில் நடந்த நம் குடியரசு தினத்தின்போது, சிறப்பு விருந்தினராக, அவர் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு, 'டிவி' மூலம், பிரேசில் அதிபர், போல்சனரோவ், உரையாற்றினார். அப்போது, மோடிக்கு நன்றியை தெரிவித்தார். 'நல்ல செய்தி வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். அதன்படி, ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தை அனுப்புவதாக கூறி உள்ளார். அடுத்த சில நாட்களில், அவை வந்து சேரும். பிரேசில் மக்களுக்கு உதவியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


'இணைந்து வெல்வோம்


'நன்றி தெரிவித்த, டிரம்புக்கு, பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: அதிபர் டிரம்பின் வார்த்தைகளை ஏற்கிறேன். இக்கட்டான காலத்தில், நண்பர்களிடையே அதிக ஒத்துழைப்பு தேவை. இந்தியா - அமெரிக்கா உறவு, மேலும் வலுப்பெறும். கொரோனா வைரசுக்கு எதிரான போரில், மனித குலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். நாம் இணைந்து இதில் வெற்றி பெறுவோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஏப்-202003:50:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பைத்தியக்காரன் குல்லாவை தான் போட்டுக்கிட்டதுமில்லாம மோசடி தலையிலும் மாட்டிவிட்டு கிண்டலடிக்கிறான்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-ஏப்-202016:34:46 IST Report Abuse
Sampath Kumar உலகின் தலை சிறந்த 50 நல்ல மனிதர்களின் பட்டியலை அமெரிக்கா வெளி இட்டு உள்ளது ..அதில் ஒரே ஒரு இந்தியர் மட்டும் தான் இடம் பிடித்து உள்ளார் . நிச்சமயம் மோடி இல்லை பின் யார் என்கீறீர்களா?? டாக்டர் மன்மோகன் சிங்க் அவர்கள் தான் அவர்தான் முதல் இடத்திலும் இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஏப்-202003:51:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஐயோ எரியுதே, எரியுதே.....
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஏப்-202010:29:26 IST Report Abuse
skv srinivasankrishnaveni PLEES INTHA கீரிக்கண்ணு டொனால்டைநம்பாதேன்ங்க காரியவாதியாக்கம் காரியம் முடிஞ்சால் உடனேயே தூக்கிகிடாசிட்டுப்போயினனே இருப்பானுக ரிக்வஸ்ட் பண்ணாமல் மெரட்டியாக்கம் வாங்கிண்டான் மருந்தினை உலகமே கொரோனர்க்கு காந்திஜியாபோதுஇவன் கண்டுக்கவேயில்லீயே இப்போது பல லக்ஷமக்களிலே செத்துருக்காங்க கிளவாலோ இளம்கயர்களோ போன உசிருவருமா யாருபெற்றபிள்ளையோ என்று மனம் பதறுதே கிழவான்னா ஐயோ மனைவி மக்களை விட்டுட்டுப்போயிட்டாரே என்றும் மனம்பதறுதுங்க பிஆரினார்க்கு ஒரேமனைவி /ஒரேகுடும்பம் என்பது கிடையாது எவனும் /OR ஏ வளுமோ ஏகபத்தினி பதின்னு வாளராவாயில்லீயே பார்த்துண்டேதான் இருக்கோம் திருமணம் எப்படி டபால்னு நடக்குமோ டிவோர்ஸும் அப்படியேதான் எனகுட்டிஸ் உண்குட்டிஸ்ன்னு பிரிச்சுன்னுபோயினனிருப்பாங்க (90 %) ஆனால் அங்கேயும் சிலர் திருமணமாயிட்டு தங்க விழா வெள்ளிவிழா என்றும் கொண்டாடுறாங்க என்பதும் இருக்கே அதன் %குறைவு நம்ம நாட்டுலே பிடிக்குதோ இல்லியோ ஒருவருக்கு ஒருத்தி என்றுதான் வாழுறோம் விட்டுக்கொடுத்து வாழும் குணம் நம்மாளுக்கு இருக்கு நம்ம கலாச்சாரம் அது (பல பாரிநேர்ஸ்கூட இந்தமுறை பிடிச்சு ஏகபத்தினி விரதமா வாழ ட்ரை பண்ணுறாங்க )பிறப்பு ஒருமுறைதான் என்பதுபோல இறப்பும் ஒருமுறையேதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X