சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான கொரோனா வாலிபர்; தேடுகிறது 7 தனிப்படைகள்

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
coronavirus, villupuram, Tamil Nadu, tn hospital, covid-19 patient, police, tn news update, coronavirus, corona updates

விழுப்புரம்: விழுப்புரத்தில், கொரோனா பாதிப்புடன் மாயமான, டில்லி வாலிபரை பிடிக்க, ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனன.

டில்லி பட்டேல் நகரைச் சேர்ந்தவர் நிதின் சர்மா, 30; ஓட்டல் மேனேஜ்மென்ட் முடித்து, வேலை தேடி, கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி வந்தார். அங்கு காரை திருடிச் சென்றபோது விபத்து ஏற்படுத்திய வழக்கிலும், புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கிலும், கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில், மூன்று மாத சிறை தண்டனை முடிந்து, கடந்த 16ம் தேதி விடுதலையான இவர், விழுப்புரத்தில் உள்ள வடமாநில டிரைவர்களுடன் ஒரு வாரம் தங்கியிருந்தார்.


latest tamil news
வெளி மாநிலத்தவர் பட்டியலில் இருந்த நிதின் சர்மா, கடந்த 6ம் தேதி, விழுப்புரம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நிதின் சர்மாவிற்கு கொரோனா தொற்று இல்லை என அனுப்பப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிதின் சர்மாவை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., சங்கர் தலைமையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.விழுப்புரம் நகரம் மற்றும் சோதனைச் சாவடிகளில், நிதின் சர்மா போட்டோவுடன் தேடி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sachin - madurai,இந்தியா
10-ஏப்-202013:08:52 IST Report Abuse
sachin நோய்த்தொற்றை தடுக்க தமிழக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை ..சும்மா படம் மட்டும் போட்டு கொண்டு இருக்கிறது
Rate this:
Cancel
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
10-ஏப்-202011:40:06 IST Report Abuse
Raja Narasiman Vivek நிதின் " சர்மா " ஏற்கனவே ஒரு ஹரி ஹாரா ராஜா சர்மா ( எச் ராஜாதான் முழுப்பேர் ) வைத்து சமாளிப்பது பத்தாதா இதுல நீ வேறயா நீ சதா வைரசு அது சூப்பர் வைரசு
Rate this:
Cancel
hare - bangalore,இந்தியா
10-ஏப்-202011:36:32 IST Report Abuse
hare How a Job-Searcher was Implicated in False cases (& left out so quickly) Probably Must have been implicated in Corona Virus. We Cant Trust AntiPeople & Power-Misusing Officials as None Have Been Punished by Courts
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X