அமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் சூட்டிய இஸ்ரேல்

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
அமெரிக்கா, பிரேசிலை, தொடர்ந்து, மோடிக்கு, புகழாரம் ,சூட்டிய இஸ்ரேல், Benjamin Netanyahua, israel pm, PM Modi, hydroxychloroquine, malaria drug, coronavirus, covid 19, corona updates

புதுடில்லி : உலகை அச்சறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குரோரோக்வின் மருந்தை அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து இஸ்ரேல் நாட்டிற்கும் இந்தியா அனுப்பி வைத்துள்ளதையடுத்து, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாகூ மோடியை மனதார வாழ்த்தியுள்ளார்.

மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும், ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்து, கொரோனோ நோயாளிகளுக்கு பலன் அளித்துள்ளது. இந்த மருந்தை, உலகிலேயே அதிக அளவில், இந்தியா தயாரிக்கிறது. . கொரோனா பாதிப்பால், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிக்கு, இந்தியா சமீபத்தில் தடை விதித்திருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்காவுக்கு, 2.9 கோடி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு பிரதமர் மோடிக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து பிரேசில் அதிபர், போல்சனரோவ், ராமாயண கதையை கூறி மருந்தை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பிரேசில் மக்களுக்கு உதவியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


latest tamil newsஇந்நிலையில் இந்தியாவின் மற்றொரு நட்பு நாடான இஸ்ரேல் நாட்டிற்கும் மருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாகூ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது

மிகவும் இக்கட்டான நேரத்தில் உயிர்காக்கும் மருந்தினை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் மட்டுமல்ல இஸ்ரேலிய மக்களும் உங்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம். இவ்வாறு டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளார்

இந்நிலையில் மேலும் 25 நாடுகளுக்கு இந்தியா மருந்து ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஏப்-202008:07:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மருந்து இது தான், கோடிக்கணக்கில் இருக்குன்னா எதுக்கு அரசாங்கம் மிரளுகிறது? 52 இஞ்சு கிரீடம் வெச்ச அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறதா?
Rate this:
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
10-ஏப்-202020:49:20 IST Report Abuse
தமிழ் வேந்தன் உலகிலேயே டெக்னாலஜி ல் மேம்பட்ட இஸ்ரேல் இந்தியாவை புகழ்ந்ததாம் ,
Rate this:
Cancel
dlpshalini271418 - Chennai,இந்தியா
10-ஏப்-202019:16:42 IST Report Abuse
dlpshalini271418 Ithukkellaam support panna oru கூட்டம் Naattula yenna nadakkunnae தெரியாம
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X