கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு; விலை உயர வாய்ப்பு

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ரியாத்: கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. இதனால், பெட்ரோலிய எரிபொருள் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது.



latest tamil news




அதனால், ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து, பெட்ரோலிய ஏற்றமதி நாடுகளின் அமைப்பான, 'ஓபெக்' மற்றும் அதன் கூட்டணி நாடுகள், நேற்று இரவு காணொலி மூலம் கலந்தாலோசித்தன.


latest tamil news


அதில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, இன்று (10ம் தேதி) காலை நடந்தது. அதில், உற்பத்தியைக் குறைக்க முடிவாகியுள்ளது.


latest tamil news


குறிப்பாக, வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில், நாள் ஒன்றுக்கு, ஒரு கோடி பேரல்கள் (ஒரு பேரல் 158.9 லிட்டர்) அளவிற்கு உற்பத்தியை குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஏப்., வரை படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கவும் முடிவாகியுள்ளது. உலகளாவிய விநியோகத்தில் இது 10 சதவீதமாகும். இதனால், பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami Sam - chidambaram ,இந்தியா
10-ஏப்-202016:54:37 IST Report Abuse
Sami Sam சர்வதேச விலை மாற்றம் இந்திய பயனாளிகளுக்கு சரியாக பயன் தரவில்லை என்றே நினைக்கிறேன்
Rate this:
Cancel
10-ஏப்-202016:15:29 IST Report Abuse
ஆப்பு இங்கே இந்தியாவில் ரொம்ப குறைச்ச விலைக்கு ஒரு மாசமா விக்குறாங்க. விலை உயர வாய்ப்பு நிறைய இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X