பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைபடுத்தப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசு அறிவுரை

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், தனிமைபடுத்தப்பட்டவர், தமிழக அரசு, அறிவுரை, corona, coronavirus, corona death, coronavirus update, coronavirus death count, coronavirus india, confirmed cases, quarantine, curfew

சென்னை: வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர், குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

* கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடு அல்லது வேறு மாநிலத்திலிருந்து திரும்பிய ஒரு நபர் அல்லது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரிடம் உடன் இருந்தவர்கள் பிறருக்கு நோய்க்கிருமி பரவுவதைத் தடுக்க சமுதாயத்திலிருந்து தன்னை விலக்கி வீட்டில் தனிஅறையில் தனிமைப்படுத்திக் கொண்டு சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதையே வீட்டில் தனிமைப்படுத்தி இருத்தல் என அழைக்கிறோம்.


latest tamil news


* தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும்.

* வீட்டில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணம் கொண்டும் வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது. மேலும் வீட்டிற்குள்ளேயே அங்குமிங்கும் செல்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும்.

* வீட்டில் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு பராமரிப்பு பணிகளை செய்தல் வேண்டும். பராமரிப்புப்பணி செய்பவரும் தவறாமல் முகக்கவசமும் கையுறையும் அணிந்திருக்கவேண்டும்.


latest tamil news* தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

* தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.

* முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு உபயோகித்து கழுவ வேண்டும்.


latest tamil news* வீட்டில் வயதானோர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தனிமைப்படுத்தபட்டவருடன் எவ்வித தொடர்பும்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்டவருக்கு, காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடன் 104 அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 120 555550ல் ஆலோசனை பெறலாம். மேலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.


latest tamil news


* அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களையும் அடுத்த 28 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.

* வீட்டை தினமும் மூன்று முறையாவது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

* இவையனைத்தும் உங்கள் ஒவ்வொருவரின் நலம்பேணுவதற்கான அரசின் அறிவுறுத்தல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
10-ஏப்-202019:38:53 IST Report Abuse
P Sundaramurthy செய்வன திருந்தச்செய் தற்போதைய சூழல் மனித குலத்திற்கே புரியாத புதிர் . ஆனால், பொறுப்பில் இருப்பவர்கள் தெரிந்த புரிந்த ஏதோ ஒரு திட்டத்தை செயல்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவை சரியானவையா என்பதை காலம்தான் வெளிப்படுத்தும். ஆனால் செயல்பாடு ஒரு தெளிவான திட்டமிடல் கொண்டிருக்கவேண்டும். இருப்பவரைகொண்டு செயல்படுத்துவது கண்ணைமூடிக்கொண்டு நடப்பதுற்கு சமம். அவர்களின் திறமையென்ன அறிவுக்கூர்மை என்ன என்பதை புரிந்துகொண்ட அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் சேவையில் ஈடுபடுத்தவேண்டும். காவல்துறை அதிகாரி தனது கட்டுப்பாட்டில் சிக்கிய இருப்பது நபர்களை ஒருவர் தோல் மீது ஒருவராக காய் போட்டுக்கொண்டு வட்டமாக சுற்றச்சொல்கிறார் என்ன சொல்ல இந்தக்கொடுமையை ? ஓட்டறிக்கை தனிமைப்படுத்தப்பட்டவர் வீடுகளில் ஒட்டப்படுவதாக திட்டமிடுகிறார்கள். ஆனால்தெளிவில்லாத திட்டம் எ. எச்சரிக்கை என்பது பார்க்கும்போதே தெரியவேண்டும் அங்கும் அரசியல் கோமாளித்தனங்கள் கூடாது. பச்சை வண்ணம் 'சரி' என்பதற்கானது. அதை எப்படி எச்சரிக்கை ஓட்டறிக்கைக்கு பயன்படுத்தலாம்? பி. வண்ணம் தனிமைப்பட்டவரின் தன்மையை உணர்த்தவேண்டும் . மஞ்சள் நிறம் வெளிநாட்டிலிருந்து வந்தவர். இளஞ்சிவப்பு தொற்று அறிகுறி உள்ளவர் சிவப்பு பாதிப்பு உள்ளவர் என்பதை பார்க்கும்போதே உணர்த்தவேண்டும் . சி. வீட்டைவிட்டு வெளியே போகாதீர்கள் . அப்படியென்றால் அவர்களின் தேவைகளை (உணவு, முகக்கவசம், கிருமிநாசினி மற்ற அன்றாட தேவைகள் ) யார் மேற்கொள்வார்கள் . அதற்கான ஆயத்தம் எந்த இடத்திலும் தென்படவில்லை . கடமைக்காக செயப்படுவன என்ற தோற்றம்தான் தெரிகிறது . எல்ல செயல்பாடுகளிலும் ஓட்டைகள்
Rate this:
Cancel
10-ஏப்-202014:31:24 IST Report Abuse
Vadivelu Shanmugam நாங்கள் அரசு அறிவுரையை அப்படியே பின்ற்றுபவர்கள். சொந்த காரில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து சொந்த ஊர் செல்ல விரும்புவோரை உறுதிமொழி வாங்கிக்கொண்டு அனுமதிக்கலாமே.
Rate this:
10-ஏப்-202016:51:06 IST Report Abuse
chandran, pudhucherry இப்பவும் அனுமதி பெற்று செல்லலாம்...
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
10-ஏப்-202014:13:14 IST Report Abuse
David DS அட அதிகாரிகளோ .... எல்லாரும் வெளி நாட்டுல இருந்து வந்து 20 நாளுக்கு மேல ஆச்சு, இப்போ எப்படி நடந்துக்கணும் னு அறிக்கை வெளியிடறீங்களே .......... உங்க அறிவை நினைச்சா புல்லரிக்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X