பொது செய்தி

இந்தியா

உலக தலைவர்களுடன் பிரதமர் போனில் பேச்சு

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, பிரதமர்நரேந்திரமோடி, உலகதலைவர்கள், நேபாளபிரதமர்,  ஜப்பான்பிரதமர், கேபிஷர்மா,  கொரோனா, கொரோனாவைரஸ், ஷின்னோஅபே, corona, coronavirus, narendra modi, PM Modi, Japan prime minister, nepal prime minister, shinzo abe, sharma oli,

புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக நேபாள பிரதமர் கேபிஷர்மா, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
நேபாள பிரதமர் ஷர்மாவுடன் பேசினேன். கொரோனா வைரசால் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த சவாலை எதிர்த்து போராட நேபாள மக்கள் கொண்டிருக்கும் உறுதிக்கு நான் பாராட்டு தெரிவித்தேன். கொரோனாவுக்கு எதிரான, நமது போராட்டத்தில் நேபாளத்துடன் நாம் துணை நிற்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.



latest tamil news



மற்றொரு டுவிட்டில், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எனது நண்பர், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன், ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினேன். இந்தியா, ஜப்பான் இடையிலான சர்வதேச ஒத்துழைப்பானது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க உதவுவதுடன், கொரோனா வைரசுக்கு பின்னர் உலக மக்கள், இந்தோ- பசுபிக் பிராந்திய பகுதி மக்கள், நமது மக்களுக்காக தீர்வு கிடைக்கவும் பயன்படும் என தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202018:07:30 IST Report Abuse
Dr Kannan மோடிஜி முதலில் உங்கள் நாட்டு மக்களிடம் பேசுங்கள். மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு துரிதமாக உதவிகளை செயுங்க ஆடம்பரங்களை மற்றும் அரசியலாக்குவதை குறித்துவிட்டு மக்களுக்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுங்கள். வெளி நாட்டு தலைவர்கள் உங்கள் கைகளை தட்டுங்கள் மற்றும் தீபம் ஏற்றுங்கள் பற்றி ஆர்வம் காட்டவில்லை,
Rate this:
Cancel
Vaduvur Arjuna Ravi - dammam,சவுதி அரேபியா
10-ஏப்-202015:03:47 IST Report Abuse
Vaduvur Arjuna Ravi இந்தியா முழுவதும் உள்ள அணைத்து கவுன்சிலர் பகுதிகளிலும் தனி தனியாக பிரித்து தனி தனி குழு அமைத்து (குழுவில் மெடிக்கல் டீம், போலீஸ் டீம் , வருவாய் டீம் கார்ப்பரேஷன் டீம் & தன்னார்வ உதவியாளர்கள் இணைந்த 10 முதல் 15 நபர் குழு ) வீடு வீடாக சென்று சோதனை செய்து கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமை படுத்தினால் தான் கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும். (வீடுதோறும் இந்த சோதனை 28 நாள் தினம் தோறும் செய்யவேண்டும்). ஊரடங்கள் மட்டும் கட்டுப்படுத்த முடியாது??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X