பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
Tamilnadu, Lockdown, Doctors, Curfew, TN News, Chief Minister, EPS, TN,TN CM, Coronavirus, Corona, COVID-19, Palanisamy, Lockdown extension, Corona updates, Corona news, தமிழகம்,ஊரடங்கு, நீட்டிப்பு, டாக்டர்கள் குழு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கினை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்குமாறு முதல்வர் இபிஎஸ்.,க்கு டாக்டர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்னும் 4 நாட்களில் முடிய இருக்கிறது. ஆனால், பல மாநிலங்கள் ஊரடங்கினை மேலும் நீட்டிக்க பரிந்துரைத்ததாக பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.


கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினாார். அதன்பிறகு மருத்துவ நிபுணர்கள் குழு சார்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக டாக்டர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மேலும் 14 நாள் நீட்டிக்க வேண்டியது அவசியம் என முதல்வருக்கு பரிந்துரை செய்ததாக அவர் தெரிவித்தார்.

latest tamil newsஅப்போது, தமிழகத்தில் ஊரடங்கினை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என டாக்டர்கள் குழு, முதல்வர் இபிஎஸ்.,க்கு பரிந்துரை செய்துள்ளது.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய டாக்டர்கள் குழுவில் இடம்பெற்ற டாக்டர் பிரதீபா கூறியதாவது: அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. ஏப்., 14க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


நாளை அமைச்சரவை கூட்டம்


இதனிடையே, நாளை (ஏப்.,11) முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை (ஏப்.,11) ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதன்பின்னர், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
10-ஏப்-202019:41:40 IST Report Abuse
RajanRajan உயிர்பலி தவிர்க்க ஊரடங்கு தேவை. மக்கள் தொகை எப்படியானாலும் பரவாயில்லை சமாளிப்போம் என்றால் ஊரடங்கை தவிர்க்கலாம். மக்களின் பஞ்சம் தவிர்க்க அந்தந்த தொகுதி MLA MP கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளை அவர்களின் தொகுதி நிதியை வைத்து அல்லது கைக்காசு போட்டு அன்னதானம் அவிங்க கல்லூரிகளிலே தங்குமிடம் அளித்து பாதுகாக்கலாம். அரசு மருத்துவ சேவையை தொடரலாம். எப்படியோ அரசியல்வாதிகளின் தேர்தல் என்று வந்தால் கொட்டுகின்ற கோடிக்கணக்கான கருப்பு பணம் இப்போ கரைந்தாக வேண்டும் என்று இந்த குரானா ஒற்றைக்காலில் நிற்கிறது. என்னே ஒரு விந்தையடா சாமி.
Rate this:
Cancel
ThenTamil - Chennai,இந்தியா
10-ஏப்-202019:16:58 IST Report Abuse
ThenTamil பெரிய ஷாப்பிங் மால்கள், தியேட்டர், வணிக வளாகங்கள், ஐடி கம்பெனிகள் போன்றவற்றை மூடி வைக்கலாம். கல்வி நிறுவனங்கள் (கல்லூரிகள்), அரசு அலுவகங்கள் போன்றவற்றை இயங்க செய்யலாம். அனைவரும் கண்டிப்பாக முக கவசம் மற்றும் கையுறைகள் அணியவேண்டும் என்று கட்டளை பிறப்பித்து அதை கடைபிடிக்கவில்லையென்றால் அபராதம் விதிக்கலாம். கல்லூரி, மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை நேரத்திலும் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணியவேண்டும் என்று வற்புறுத்தவேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஏப்-202018:44:48 IST Report Abuse
Bhaskaran தனிப்பைப்படுதலைஅதிகரிக்கும் அதே நேரத்தில் தினக்கூலிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அதையும் கொஞ்சம் யோசியுங்கள்
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
10-ஏப்-202019:30:37 IST Report Abuse
Nallavan Nallavanஅதை பற்றி TRUMP & MODI கூடிய கூட்டத்தில் கூடி முடிவு எடுக்கப்படும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X