பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி வழங்குகிறது ஆசிய வளர்ச்சி வங்கி

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
corona, coronavirus, Asian development bank, ADB, COVID-19 fund, India, Nirmala sitharaman, FM Nirmala sitharaman, finance minister,FM, Nirmala, Covid-19, relief fund, Masatsuku Asakawa, Health emergency, Health, ADB chief, Corona support fund, Relief package, economic package, இந்தியா, ஆசியவளர்ச்சிவங்கி, நிதியுதவி, பாராட்டு, நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்நிர்மலாசீதாராமன்,

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவிற்கு, ரூ.16,500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் மசாட்சுகு அசக்கவா கூறியுள்ளார்.

நிர்மலாவுடன் நடந்த ஆலோசனையின் போது மசாட்சுகு கூறியதாவது: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தேசிய சுகாதார அவசரநிலை திட்டம், தொழிலதிபர்களுக்கு வரிசலுகை, ஏழைகள், பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் போன்றவற்றிற்கு பாராட்டு தெரிவித்தார்.


latest tamil newsமேலும், இந்தியாவின் அவசர தேவைக்கு உதவி செய்ய ஆசிய வளர்ச்சி வங்கி உறுதிபூண்டுள்ளது. இதனால், கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், சுகாதாரத்துறைக்கு உதவவும், பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், முறைசாரா தொழிலாளர்கள், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையிலும் உடனடியாக ரூ.16,500 கோடி( 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியுதவி செய்யப்படும். இந்தியாவிற்கு தேவைப்பட்டால் கூடுதலாக உதவி செய்யப்படும். இதற்காக நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandiyan - Chennai,இந்தியா
10-ஏப்-202016:47:17 IST Report Abuse
Pandiyan ஆசிய வாங்கி 2.2 பில்லியன் டாலர் (16500 கோடி) உலகவங்கி சுமார் 1 பில்லியன் டாலர் சுமார் 7300 கோடி, MPகளின் தொகுதிகான 5 கோடி 2 வருடம் கொரானாவுக்காக பிடித்தம் சுமார் 7000 கோடி..இதையெல்லாம் பார்க்கும் பொழுது மத்திய அரசாங்கம் கஜானாவை கழுவி துடைச்சு வச்சிருக்காங்க போல தெரிகிறது ..இதுலவேரா பொருளாதார வல்லுநர்கள் மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பெரிய ரிலீஃப் பட்டியலை போட்டுவச்சி காத்துக்கொண்டிருக்கிறாங்கோ ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X