கொரோனா: கடலின் ஒரு துளியை தான் கண்டறிந்துள்ளோம்!

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

பெர்லின்: உலக நாடுகள் கண்டறிந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுகள் எண்ணிக்கை வெறும் 6% தான் என்றும், உலகளவில் தொற்று ஏற்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை கோடிகளை தாண்டும் என ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றனர்.latest tamil news


இன்றைய (ஏப்.,10) நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது. 3.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், 'லான்செட் தொற்றுநோய்கள்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வந்த தகவல்களை ஆராய்ந்து, ஜெர்மனியின் காட்டிங்ஜென் பல்கலைக்கழக ஆய்வாளர்களான கிறிஸ்டியன் பாமர் மற்றும் செபாஸ்டியன் வால்மர் ஆகியோர் புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். உலக நாடுகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை கொண்டு, கொரோனா வைரஸ் இறப்புகளையும், ஒருவருக்கு நொய் தொற்று உண்டாகி, அவர் இறக்க எவ்வளவு காலம் ஆனது என்பதையும் வைத்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.


latest tamil news


அதன்படி, உலகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில், சராசரியாக 6% பேரை மட்டுமே கண்டறிந்துள்ளதாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை கோடியை தாண்டியிருக்கும் என்கின்றனர். அரசு தங்களிடம் உள்ள இந்த எண்ணிக்கையை வைத்து திட்டமிடும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பரிசோதனைகளின் தரம் மற்றும் எண்ணிக்கையில் இருக்கும் வேறுபாடுகள், அதிகாரப்பூர்வ பதிவுகள் பயனுள்ள தகவலை வழங்காததையே காட்டுவதாக எச்சரிக்கின்றனர்.

இவர்களது மார்ச் 31, 2020 மதிப்பீட்டின் படி, ஜெர்மனியில் 4.6 லட்சம் பேரும், அமெரிக்காவில் ஒரு கோடிக்கு அதிகமானோரும், ஸ்பெயினில் 50 லட்சம், இத்தாலியில் 30 லட்சம், இங்கிலாந்தில் 20 லட்சம் பேருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்கிறது. அதே நாளில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை., 9 லட்சம் பேருக்கு உலகளவில் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தது. பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். புதிய தொற்றுகளை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி, அவர்கள் தொடர்புகொண்ட நபர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். பரிசோதனைகளை தாமதப்படுத்தியதால் தான் இத்தாலியும், ஸ்பெயினும் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தது என அறிக்கையில் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
10-ஏப்-202020:52:32 IST Report Abuse
Subburamu Krishnaswamy They may be correct. But all the virus particles are not dangerous and virulent. Corona virus itself is a multi number of strains. All are not virulent. One strain may prevent the entry of the other. Even if we test positive for a virus, we need not be suffer with a disease related to that avirulent nature of the virus. Virus research are very much limited and very difficult. The method to assess the virus is also not a full proof one. The mental courage and intelligent planning to prevent the spread of the virus is more important than the academic research papers. All research outcomes may not be useful to the society, but useful to the person to receive doctorate degrees. Let us fight the virus together.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
10-ஏப்-202019:27:52 IST Report Abuse
Tamilnesan ஆக மொத்தத்தில் வளர்ந்த நாடுகளின் போக்கு சரியில்லை.....சின்ன பிள்ளை தனமாக நடந்து கொள்கிறார்கள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
10-ஏப்-202018:48:33 IST Report Abuse
blocked user ஆனால் நம்ம ராஜாஸ் அரசியல் கட்சிகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாஷாக கருத்து போட்டு இருக்கிறார். ஒருவேளை அவர் ஒரு சீன அனுபவம் பெற்ற கரோனா நிபுணராக இருக்குமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X