பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியை பின்தொடரும் அமெரிக்கா

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Narendra Modi, Modi, America, White House, PM Modi, PM Office, PMO, President, India, India president, India Prime Minister, Ramnath Kovind, Twitter, US, Trump, பிரதமர், மோடி, ஜனாதிபதி, டுவிட்டர், பாலோ, பின்தொடர்கிறது, அமெரிக்கா, வெள்ளைமாளிகை

புதுடில்லி: பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை அமெரிக்காவின் அதிகாரபூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகை டுவிட்டரில் பின் தொடர துவங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் அதன் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவிற்கு ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை தராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடுமென டிரம்ப் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து மனிதாபிமான முறையில் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ததை அடுத்து 'மோடி கிரேட். ரியலி குட்' என டிரம்ப் நன்றி பாராட்டியிருந்தார். ‛இந்தியா - அமெரிக்கா உறவு முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது. நெருக்கடியான காலக்கட்டங்கள், நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன' என டிரம்பிற்கு மோடி பதிலளித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில் அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடும் வெள்ளை மாளிகை , பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை பின் தொடர துவங்கியுள்ளது. வெள்ளை மாளிகை, அதிபர் டிரம்ப் உள்ளிட்ட முக்கியமான 19 கணக்குகளை மட்டுமே பின் தொடர்கிறது. அதில் அமெரிக்கர்கள் அல்லாத டிவிட்டர் கணக்குகள் என்று எடுத்து கொண்டால், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் அலுவலகம் மட்டுமே. வேறு எந்த உலக தலைவர்களையும் வெள்ளை மாளிகை பின் தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
10-ஏப்-202018:51:55 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் சிரிப்புதான் வருகிறது ஊழல் ஊழல் என்று சொல்லியவன் சொத்துக்களை விட்டு சென்றான் நேர்மை நேர்மை என்று சொல்லி வந்தவன் அவன் வைத்து விட்டு போனதை விற்று காசாக்கி பொழுது கழிக்கிறான் இதை FOLLOW பண்ணாமல் இருந்தால் நல்லது
Rate this:
NATARAJAN - Coimbatore,இந்தியா
10-ஏப்-202019:42:54 IST Report Abuse
NATARAJANஉன் மாதிரி இந்தியனை நினைத்து வெட்கப்படுகிறேன்...
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
12-ஏப்-202009:43:55 IST Report Abuse
skanda kumarvetri kodi kattu -poonai kan moodinal ulagam iruttu endru sollumam. ulagamey modi pugalugiradhu. neengal tasmac tamilnattil thirundha matteergal....
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
14-ஏப்-202015:50:10 IST Report Abuse
vivek c maniஇந்திய நாட்டில் வெளிநாட்டவர் வந்து தகாத முறையில் இந்தியர்களை கொடுங்கோன்மைக்கு உள்ளாக்கி வெற்றிக்கொடி நாட்டினவர்கள், அவர்கள் வெற்றிக்கு கூறும் ஒரேகாரணம், இந்தியாவில், இந்தியாவை அழிக்க எப்போதும் தயாராயிருக்கும் இந்தியாவை சேர்ந்த வெற்றிகொடிக்கட்டு எனும் மக்களே செய்யும் உதவிதான் என்று....
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
10-ஏப்-202018:49:34 IST Report Abuse
Nallavan Nallavan இன்னும் இந்த மாத்திரை இங்கே அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை இதுவும் இல்லாமல் இங்கே மேலும் 9 மருந்துகள் பயன்படுத்துகின்றனர் ,
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
10-ஏப்-202019:08:42 IST Report Abuse
s.rajagopalanஅவங்க கேட்கிறபோது கொடுப்பதுதான் முக்கியம் ....நல்ல மருந்தா இல்லையா என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும்....
Rate this:
Cancel
Ravi - Chennai,இந்தியா
10-ஏப்-202018:44:39 IST Report Abuse
Ravi arumai
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X