பொது செய்தி

இந்தியா

தாமதமாக நிதி அறிவித்த பாகிஸ்தான் - இந்தியா விமர்சனம்!

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
India, Pakistan, Fund, Coronavirus, Corona, COVID-19, SAARC, Covid emergency fund, relief fund, PM Modi, Narendra Modi, Imran Khan, Bangladesh,Nepal, Afghanistan,Bangladesh, Bhutan, Maldives, South Asian Association for Regional Cooperation,   இந்தியா, பாகிஸ்தான், நிதி, கொரோனா, வைரஸ்,

புதுடில்லி: இந்தியாவின் முன்னெடுப்பினால், சார்க் நாடுகளின் அவசர நிதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு கடைசியாக நிதி அறிவித்த பாகிஸ்தானை, 'ஒரு நாட்டின் செயலை பொறுத்தே தீவிரத்தன்மை அளவிடலாம்' என பெயர் குறிப்பிடாமல், இந்திய வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க, சார்க் நாடுகள் கூட்டத்தை மார்ச் 15-ல் பிரதமர் மோடி ஏற்பாடு செய்தார். ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் அவசர கால நிதியை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை அதில் முன் வைத்தார். இந்தியாவே முதல் ஆளாக 10 மில்லியன் டாலர் அவசர நிதியை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, நேபாளம் மற்றும் ஆப்கன் தலா ஒரு மில்லியன் டாலர், மாலத்தீவு 2 லட்சம் டாலர், பூட்டான் ஒரு லட்சம் டாலர், பங்களாதேஷ் 1.5 மில்லியன் டாலர் மற்றும் இலங்கை 5 மில்லியன் டாலர் நிதியை அறிவித்தன. மிகவும் தாமதமாக வியாழனன்று, பாகிஸ்தான் 3 மில்லியன் டாலர் நிதியளிப்பதாக அறிவித்தது.


latest tamil news


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்ச செய்தித் தொடர்பாளர், 'பிரதமர் மோடி உறுதியளித்ததை சிறப்பாக நிறைவேற்ற இந்தியா அக்கறைக்கொண்டுளது. இந்தியாவின் உதவி ஆப்கன், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நாடுகள், கொரோனா வைரஸ் நிதிக்கு பங்களிப்பதாக ஆரம்பத்திலேயே அறிவித்தவை. ஒரு நாட்டின் செயலை வைத்து அதன் தீவிரத்தன்மை அறிய முடியும்' என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
11-ஏப்-202010:34:06 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பாக். அனைத்துத் தேவைகளுக்காகவும் சீனாவிடம் கையேந்திக்கொண்டுள்ளது சீனாவின் காலனியாதிக்க நாடாக பாக். சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி விட்டது
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
10-ஏப்-202020:49:39 IST Report Abuse
Ray ஒரு கட்டுரையில் / செய்தியில் மில்லியன் அல்லது லக்ஷம் இதில் ஏதாவது ஒன்றையே பயன்படுத்தினால் குழப்பமிருக்காதுங்க லக்ஷம் கோடி என்பதெல்லாம் புழக்கத்திலிருந்து நீக்கவேண்டிய நேரம் வந்து விட்டது
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
10-ஏப்-202019:50:54 IST Report Abuse
Abbavi Tamilan நீங்கள் ஏற்கெனவே அறிவித்த நிதி இன்னும் முழுமையாக மக்களுக்கு போய் சேரவில்லையாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X