பொது செய்தி

இந்தியா

சமூக இடைவெளிக்காக மரத்தில் வீடு கட்டிய உ.பி., நபர்

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
corona, coronavirus, social distance, UP, Uttar Pradesh, Hapur, UP district, tree house, Mukul Tyagi, house, COVID-19, UP, India, உ.பி.,உத்தரபிரதேசம், கொரோனா, கொரோனாவைரஸ், மரவீடு, சமூகஇடைவெளி

ஹபுர்: சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக உ.பி.,யை சேர்ந்த நபர் ஒருவர், மரத்தில் சிறிய வீடு ஒன்றைகட்டி அதில் தனியாக வசித்து வருகிறார்.

நாடு முழுவதையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. 199 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெயியை கடைபிடித்தல், வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் ஆகியவையே ஒரே வழி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உ.பி.,யில் மட்டும் தற்போதுவரை 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, உ.பி., மாநிலம் ஹபூர் பகுதியை சேர்ந்த முகுல் த்யாகி என்பவர் மரத்தில், கட்டைகளை கொண்டு சிறிய வீடு கட்டி அதில் தனியாக வசித்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை கடைபிடிக்க முடியும். இதனால், சமூக இடைவெளியை மனதில் வைத்து, தனியாக வசிக்க வேண்டும் என முடிவு செய்தேன். எனது மகன் உதவியுடன் மரத்தை வெட்டி, கட்டைகளை இணைத்து குடியிருப்பு ஒன்றை உருவாக்கி அதில் வசித்து வருகிறேன். இங்கு வசிப்பது இயற்கையுடன் இணைந்து வாழ்வது போல் உள்ளது. இங்கு தூய்மையாகவும் உள்ளது. வீட்டில் இருந்தே உணவு வந்துவிடும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
10-ஏப்-202021:09:27 IST Report Abuse
S. Narayanan தயவு செய்து இனியாவது மரங்களை வெட்டாதீர்கள் என்று எடுத்து கூறுகிறார் போலும்.
Rate this:
Cancel
Munish - Bangalore ,இந்தியா
10-ஏப்-202021:06:41 IST Report Abuse
Munish நானே பெங்களூரில் லாக்டவுன் ஆரம்பித்த நாள் (செ) முதல் நான் ஓட்டும் வாடகை காரிலேயே இருக்கேன். இந்திரா கேன்டீன் உணவோடு. என் சொந்த ஊர் தருமபுரியில் ஒரு கிராமம்.
Rate this:
Cancel
10-ஏப்-202020:50:54 IST Report Abuse
ஆப்பு மழை வராம இருக்க ப்ரார்த்திக்கறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X