தென்கொரியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா..!

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020
Share
Advertisement
South Korea, Coronavirus, Corona Cases, China, Corona, COVID-19, Daegu city, Corona outbreak, Corona updates, Corona in Daegu, World fights corona, தென்கொரியா, கொரோனா, பாதிப்பு, இல்லை, சீனா

டேகு: சீனாவுக்கு வெளியே கொரோனா தொற்று பரவிய வரும் நிலையில், தென்கொரியாவின் டேகு நகரில் முதன்முறையாக புதிதாக யாருக்கும் கொரொனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவில் கடந்த பிப்ரவரியில் பரவ துவங்கிய கொரோனாவுக்கு இதுவரை 208 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். டேகு நகரில் உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றவர்களால் மட்டும் 6 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவியது. மொத்தம் அதிகபட்சமாக 6,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.


latest tamil news


தென்கொரியாவில் பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் நாளொன்றுக்கு 900 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், புதிய சாதனையாக நேற்றிரவு முன்பு வரை குறைந்த எண்ணிக்கையில் 27 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதாகவும், தென்கொரியாவின் மற்ற நகரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறதென கொரியா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தப்படியாக வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தென்கொரியாவில் கொரோனா வேகமாக பரவ துவங்கியது. தென்கொரியாவில் நடத்தப்பட்ட பரவலான பரிசோதனை மற்றும் மக்கள் சமூக விலக்கலை சரியாக கடைப்பிடித்தன் பலனாக தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வர துவங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X