பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவுக்குள் புகுந்து உள்துறை அமைச்சரை விசாரித்த தமிழக போலீஸ்!

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
Karnataka, Tamil Nadu, Cops, Police, Home Minister, Coronavirus, Corona, COVID-19, Corona outbreak, Corona updates, India, Basavaraj Bommai, Lockdown, Curfew, Lockdown violation, கர்நாடகா, தமிழகம், போலீசார், விசாரணை, உள்துறை, அமைச்சர், சோதனைச்சாவடி

சென்னை: வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரர்கள் நமது தமிழக போலீசார். ஓவர் ஆர்வத்தில் கர்நாடகா எல்லை என்று தெரியாமல், அந்த மாநிலத்திற்குள் புகுந்து, அந்த மாநில உள்துறை அமைச்சரையே விசாரித்துள்ளனர் நமது போலீசார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டன. மேலும், மக்கள் வெளியே நடமாடாமல் இருக்க மாநில எல்லை உட்பட பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். அரசின் அனுமதியுடன் வாகன பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். கர்நாடகா-தமிழக எல்லையான அத்திபெலே பகுதியில் தமிழக போலீசார் தடுப்பு அமைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், வாகன பாஸ்களை தவறாக பயன்படுத்துவதை சரிபார்க்க, கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நகரம் முழுவதும் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.


latest tamil newsஆய்வின் போது அத்திபெலே சோதனைச் சாவடி வழியாக வந்த அமைச்சரின் வாகனத்தை தமிழக போலீசார் நிறுத்தியுள்ளனர். அமைச்சர் என்பதை அறியாமல், அவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்த இடம், கர்நாடகா எல்லைக்கு உட்பட்டது என்பதால், கோபமடைந்த பசவராஜ், பெங்களூரு ஊரக மாவட்ட எஸ்.பி., ரவி டி சன்னன்னவரை அழைத்து, கர்நாடக பகுதியில் இருக்கும் தமிழக போலீசாரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். அண்டை மாநில எல்லைக்குள் சோதனையிட்டது மட்டுமல்லாமல் அம்மாநில அமைச்சரையே விசாரித்தது தமிழக போலீசாரின் ஆர்வ மிகுதியையே காட்டியுள்ளது.

இது குறித்து பசவராஜ் பொம்மை டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
இன்று நான் நகரில் பல பகுதிகளை ஆய்வு செய்தேன். அந்த நேரத்தில் கர்நாடக எல்லையில் தமிழக போலீசார் தடுப்புகளை வைத்திருப்பதை நான் கவனித்தேன். உடனடியாக பெங்களூரு ஊரக போலீஸ் எஸ்.பி.க்கு அழைப்பு விடுத்து, தடுப்புகளை வெளியேற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தினேன், இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
ரவி டி சன்னன்னவர் கூறுகையில், போலீசாருக்கு தமிழகம் பக்கத்தில் எந்த நிழலும் இல்லாததால், அவர்கள் கர்நாடகா பக்கத்திற்குள் நுழைந்து தடுப்புகளை அமைத்துள்ளனர். தமிழக போலீசாரிடம் தடுப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்திள்ளோம், அவர்கள் அதை அகற்றிவிட்டார்கள், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
15-ஏப்-202023:21:30 IST Report Abuse
David DS அப்படியே சசிகலாவையும் நலம் விசாரிச்சிருக்கலாமே?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
14-ஏப்-202004:11:56 IST Report Abuse
meenakshisundaram வடிவேல் காமெடி ?
Rate this:
Cancel
Dubuk U - Chennai,இந்தியா
13-ஏப்-202011:11:07 IST Report Abuse
Dubuk U கணிதத்தின் படி அவர்கள் செய்தது சரி தான் (as per the graph theory. in a Directed graph If there is an leading edge connects two subgraohs from A to B, leading edge is considered to be with B. So after the last U -turn (or branching) Tamil Nadu have power to stop.)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X