பொது செய்தி

இந்தியா

கையிருப்பில் 3 கோடியே 28 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள்

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: கொரானா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 3 கோடியே 28 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார துறை செயலர் கூறியுள்ளார்.latest tamil news


நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொடர்பாக நாள்தோறும் மத்திய சுகாதார துறை இணை செயலர் சுகாதார லாவ்அகர்வால் , மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் புன்யஸ்ரீவத்சவா, வெளியுறவு துறை அமைச்சக அதிகாரி தாமுரவி ஆகியோர் இணைந்து கூட்டாக பேட்டி அளித்து வருகின்றனர்.

இன்றைய பேட்டியில் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 678 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 33 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 6,412 பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 503 பேர் மீண்டனர். மக்கள் அனைவரும் முககவசம் அணிவது அவசியமானது. கைத்துணியை கூட வைத்து கட்டி கொண்டால் போதுமானது.


latest tamil newsசீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் கண்டிப்பாக யாரும் நுழையக்கூடாது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் உள்ளன. 3 கோடியே 28 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் கைஇருப்பில் உள்ளன. 20, 473 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
10-ஏப்-202022:34:32 IST Report Abuse
Indhiyan 21 நாட்கள் சிகிச்சை அவசியம். ஒரு ஆளுக்கு 5 மாத்திரையாவது கொடுக்க வேண்டி இருந்தால் இப்போது இருப்பில் 25 லக்ஷம் பேருக்கு மேல் கொடுக்க முடியாது. 130 கோடி மக்கள் இருக்கிறார்கள். ரொம்ப கவனம் தேவை
Rate this:
Cancel
மதுரை வாசு - மதுரை மாநகர்,இந்தியா
10-ஏப்-202020:05:55 IST Report Abuse
மதுரை வாசு உலக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை உற்பத்தியில் 40% இந்தியாவில் தான் தயாராகிறது. மேலும் இந்த மருந்தின் மூலப்பொருள் உற்பத்தியில் உலக அளவில் 70% நம் நாட்டில் தான் நடக்கிறது. எனவே பயம் கிடையாது. நாம் அமெரிக்காவுக்கு மட்டுமே இறுதி பொருளான மாத்திரைகளை கொடுத்தோம். பிரேசில், இலங்கை போன்றவற்றிற்க்கு மூலப்பொருளைத்தான் கொடுத்தோம். அதைப்பெற்றுக்கொள்ளும் அவர்கள் அதிலிருந்து மாத்திரைகளை தயார் செய்து கொள்ளவேண்டும். அதுபோலவே தற்போது செயலாளர் சொல்லியிருப்பது மாத்திரையின் ஸ்டாக் மட்டுமே. நம்மிடம் ஏராளமான மூலப்பொருள் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு மாத்திரையிலும் 200மில்லிகிராம் மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து இருக்கும். அப்படியானால் 1கிராம் மூலப்பொருளிலிருந்து 5 மாத்திரைகள் நம்மால் உற்பத்தி செய்ய முடியும் (1கிராம்= 1000 மிகி) டாக்டர். சி. வாசு
Rate this:
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202018:35:39 IST Report Abuse
Dr Kannan 3 கோடியே 28 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார துறை செயலர் கூறியுள்ளார். இந்தியாவில் 10 % மக்களுக்கு காரோண பரவினால் நமக்கு தேவை படுவது 13 கோடி மாத்திரைகள் . நம் காய் வசம் இருபது மிகவும் குறைவு. இந்த நிலையில் ஏற்றுமதியை தடை செய்வதே மக்களின் நலனில் அக்கறைகொண்டு அரசு.
Rate this:
10-ஏப்-202022:06:05 IST Report Abuse
ஆரூர் ரங்காமெடி பண்ணாதீங்க. கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து உதவாது . மருத்துவப் பணியாளர் களுக்கு முன்தடுப்பாக உதவலாம். அவ்வளவுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X