கொரோனாவை கட்டுப்படுத்திய தென்கொரியா: திட்டமிட்டபடி நடக்கிறது தேர்தல்!

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சியோல்: கொரோனா வைரஸ் தொற்றால் சீனா பாதிக்கப்பட்ட ஓரிரு வாரங்களில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு சென்றது தென்கொரியா.


latest tamil news



தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்துதல், அறிகுறி தென்பட்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துதல், விரைவில் சோதனை முடிவை அறிதல், சமூக விலகலை கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளால், கொரோனா பரவலை மிக விரைவாகக் கட்டுப்படுத்தியது. இதனால் பல்வேறு நாடுகளின் பாராட்டைபெற்றது தென்கொரியா.

தென்கொரியாவில் தற்போது, 10,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 208 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த தென் கொரியாவிலும் இன்று, புதிதாக 27 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




இதனால், தென் கொரிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் மீறி திட்டமிட்டபடி துவங்கியுள்ளது. ஆனால், வரும் 15ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று முதலே வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news




'வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசமும், கையுறையும் கட்டாயம் அணிந்து வர வேண்டும். வாக்குச்சாவடியில், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்பின்னர் தான் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்' என, தென் கொரிய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.



latest tamil news


முகக்கவசமும், கையுறையும் அணிந்த மக்கள், போதுமான இடைவெளி விட்டு மிக நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் படங்கள் வைரலாகி வருகின்றன. 'அரசும் மக்களும் இணைந்து செயல்பட்டால், கொரோனாவை வெல்ல முடியும் என்பதற்கு தென்கொரியா உதாரணமாக உள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X