பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: தமிழகத்தில் 84 வயது மூதாட்டி ‛டிஸ்சார்ஜ்'

Updated : ஏப் 11, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement

சென்னை: சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி உட்பட 3 பேர் ‛டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று (ஏப்.,10) மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தூத்துக்குடியை சேர்ந்த மூதாட்டி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.



latest tamil news




சென்னையில் நிருபர்களை சந்தித்த தலைமை செயலர் சண்முகம் கூறியதாவது: நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தான் ஊரடங்கினை பின்பற்றி வருகிறோம். தமிழகத்தில் இன்று புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்தவர்கள் தான் என்பதால், பரவல் ஓரளவு கட்டுக்குள் உள்ளது. இதில் 72 பேருக்கு 5 பேர் மூலமாக கொரோனா பரவியுள்ளது.ஏற்கனவே பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார்களையும் தனிமைப்படுத்தி சோதனை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனைக்கு வந்த 71 பேருக்கு கொரோனா இல்லை .


latest tamil news



முதல்வர் இபிஎஸ், பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களை மீண்டும் ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளார். இதனால், மீண்டும் சோதனை மேற்கொள்ள இருக்கிறோம். ஊரடங்கு நீட்டிப்பது குறித்து பல்வேறு வல்லுநர்களுடன் முதல்வர் கேட்டு வருகிறார். இன்றும் டாக்டர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, நோயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் ஊரடங்கினை நீட்டிக்குமாறு டாக்டர்கள் வலியுறுத்தினர். இது குறித்து நாளை அமைச்சர்களுடன் ஆலோசித்து முதல்வர் அறிவிப்பார். ரேபிட் சோதனை உபகரணங்கள் நேற்று வந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதனை பெற்றுக்கொண்டு மாநிலங்களுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இதனால் ஓரிரு நாளில் தமிழகம் வந்துவிடும்.


latest tamil news




latest tamil news



தமிழகத்திற்கு நேரடியாகவும் உபகரணங்கள் வழங்குவதாக தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதனால், மருத்துவ சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.கொரோனாவை கட்டுப்படுத்தவே ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்யாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


latest tamil news



நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு முழு செலவும் அரசு ஏற்கும். கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடியில் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதுவரை 44 பேர் குணமடைந்துள்ளனர். எம்எல்ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெறப்படும் நிவாரணப் பணத்தில் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் வாங்கப் பயன்படுத்தப்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் இன்னும் 2ம் கட்டத்திலேயே தான் கொரோனா பாதிப்பு உள்ளது. அனைத்து டாக்டர்களும் முறையான முகக்கவசம் அணிந்து நோயாளிகளை பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


84 வயது மூதாட்டி


சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.,11) ஒரே நாளில் 84 வயது மூதாட்டி உட்பட 3 பேர் முழுவதுமாக குணமடைந்து ‛டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
11-ஏப்-202019:08:36 IST Report Abuse
unmaitamil மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் நாகரீகமில்லாமல் துப்புகின்ற ஒரு கேவலமான கூட்டத்தை ஆதரித்தும், அவர்களுக்கு ஆதரவு கருத்து எழுதும் ஆட்கள் திருந்தாதவரை, அந்த கூட்டமும் திருந்தாது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
11-ஏப்-202017:17:49 IST Report Abuse
S. Narayanan எத தொட்டாலும் கொரோனா தொற்றிக்கொள்ளும் என்று சொன்னால் இனி பசங்க எப்படி புத்தகங்களை எடுத்து தைரியமா படிப்பாங்க?
Rate this:
Cancel
kedisah - sangis,அங்கோலா
11-ஏப்-202016:22:47 IST Report Abuse
kedisah பீலா வா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X