துபாயின் சுகாதார இயக்கம் குறித்து கிண்டல் ; 3 ஆசிய இளைஞர்கள் கைது

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement

துபாய் : துபாயில் அரசுக்கு தகாத வகையில் வலை தளங்களில் வீடியோ பதிவிட்டதாக குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் 2 ஆசிய இளைஞர்களை துபாய் போலீசார் கைது செய்தனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சிலும் கொரோனாவுக்கு எண்ணற்றவர்களும் பாதிக்கப்பட்டனர். துபாயில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எமிரேட்சில் தங்கியிருப்பது மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவது மற்றும் அரசின் இயக்கங்களை கேலி, கிண்டல் செய்வது போன்றவற்றை வீடியோவாக வெளியிடுவதை போலீசார் கடுமையாக எச்சரித்தனர். இது போன்று பல வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வலம் வருவதே இந்த எச்சரிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


latest tamil news



இந்நிலையில் அரசுக்கு புறம்பாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஆசிய இளைஞர்கள் 3 பேரை துபாய் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது : நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் அரசு நிறுவனத்தையும் அதன் செயல்பாட்டையும் குறை கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்காக முதல் நபர் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து, மற்றொருவர் வெற்று சாலையில் துபாய் காவல்துறையில் பணிபுரிவதாக கூறி கார் படிவத்தை காட்டி ஏமாற்றுவது போன்று வீடியோ வெளியிட்டார். இதையொட்டி அந்த 2 வது நபரும் கைது செய்யப்பட்டார். கடைசியாக, டிக் டாக் மற்றும் பிற தளங்களில் இருந்து வைரலான கொரோனா குறித்த சில வீடியோக்களை வெளியிட்டார். இதற்காக அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news



மேலும் துபாய் போலீசார் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டு அவர்களின் குற்றச்செயல்களையும் தெளிவுபடுத்தினர். இது போன்ற அவசர நிலை காலங்களில் அரசின் செயல்களை கேலி செய்து வீடியோ பதிவிடுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Raghav - chennai,இந்தியா
16-ஏப்-202011:11:54 IST Report Abuse
Vijaya Raghav இந்தியாவில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். குறிப்பாக சினிமா துறையில் இருப்பவர்கள் துறைக்கு வருவதற்கு முன் பிச்சை எடுத்திருப்பார்கள். திரைப்பட துறைக்கு வந்ததும் முதலில் ப்ராஹ்மணர்களை தரக்குறைவாக பேசவேண்டும் ஹிந்துக்களை தரக்குறைவாக பேசவேண்டும். இரண்டு படங்கள் ஓடவில்லை என்றல் திரும்பவும் பிச்சை தொழிலுக்கு மாறவேண்டும்.
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
13-ஏப்-202022:19:46 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி தமிழகத்தில பிரதமரை அவமதித்து யார் பதிவிட்டாலும் அதை மாநில அரசு கண்டுகொள்வதில்லை. அதை ரசிக்கியறதோ என்ற சந்தேகம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஏப்-202003:56:16 IST Report Abuse
J.V. Iyer கொழுப்பு. சும்மா இருக்க முடியாது இவர்களால்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
14-ஏப்-202021:03:27 IST Report Abuse
madhavan rajanவெளிநாட்டில் இருக்கும்போது அதிக கவனமாக இருக்கவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத இவர்களைப்போன்றவர்களால் பலருக்கு விசா கிடைப்பதில்லை. இந்தியாவில் எவர் வேண்டுமானாலும் அரசையும் அதன் ஆட்சியாளர்களையும் எப்படிவேண்டுமானாலும் கிண்டல் செய்து ஊடகங்களில் வெளியிடலாம். அதுபோல வெளிநாட்டில் செய்தால் தங்குவார் அறுந்துடும். ஜாக்கிரதை. இதில் இந்தியாவில் சுதந்திரம் இல்லை என்று புலம்பல் வேறு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X