ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை தெலுங்கானா அமைச்சரவை கூட்டம்

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா தாக்கத்தினை குறைக்க ஊரடங்கு ஊத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. தெலுங்கானாவின் பிரகதிபவனில் மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையில் நாளை (ஏப்.,11) அமைச்சவை கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதனால் எழும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும். மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும், ஊரடங்கு காலங்களில் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார சிக்கல்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


latest tamil news



தொடர்ந்து மாநிலத்தில் உள்ள ஏழைகள் மற்றும் குடியேறிகளுக்கும், விவசாய பொருட்கள் கொள்முதல் போன்றவற்றுக்கு நிதி ஆகியவை அளிப்பது தொடர்பாகவும் முதல்வர் பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஏப்-202021:56:13 IST Report Abuse
ஆரூர் ரங் ஹைதராபாத் தப்லீக்களின் கோட்டயாச்சே . சரி ஏப்ரல் 7 ஆம் தேதியோடு எங்க மாநிலத்துல கொரோனா ஒழிஞ்சுடும்னு உதார் விட்டியே. என்னாச்சு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X