சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

சபாஷ் ஆதித்யநாத்!

Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
 சபாஷ் ஆதித்யநாத்!

'பரவாயில்லையே... விஷயம் தெரிந்தவராகத் தான் இருக்கிறார். நாம் தான், அவசரப்பட்டு, தப்பு கணக்கு போட்டு விட்டோம்' என, உத்தர பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தை, எதிர்க்கட்சியினரே பாராட்டத் துவங்கியுள்ளனர்.

ஆதித்யநாத், மடாதிபதியாக இருந்து, முதல்வராக இருந்தவர் என்றாலும், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். எதிலுமே தடாலடியாகத் தான் முடிவு எடுப்பார். இதனால், எதிர்க்கட்சியினரின் கடும் விமர்சனங்களுக்கு, அவர் அடிக்கடி ஆளாவது வழக்கம்.உ.பி., மாநில, பா.ஜ., தலைவர்களும், 'அரசியலுக்கு வந்து விட்டால், சில விஷயங்களில் நெளிவு, சுளிவுடன் இருக்க வேண்டும். ஆனால், இவர் அதிரடியாக செயல்படுவதை பார்த்தால், அடுத்த தேர்தலில் ஓட்டு வாங்க முடியாது போலிருக்கிறதே...' என, புலம்பி வந்தனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ், உ.பி., மாநிலத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எதிர்க்கட்சியினர் வழக்கம் போல, ஆதித்யநாத்தை விமர்சித்தனர். இந்த விஷயத்திலும், அவர் அதிரடியாகவே களம் இறங்கினார். லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள் அனைத்தையும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற உத்தரவிட்டார்.

இதனால், அவற்றின் உரிமையாளர்கள் மிரண்டு போனாலும், பொதுமக்கள், முதல்வரை பாராட்டி தள்ளுகின்றனர். முதல்வரின் அதிரடி நடவடிக்கைகளை விமர்சித்தவர்கள், இப்போது வாயடைத்து போயுள்ளனர். சபாஷ் ஆதித்யநாத்!' என, பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனர், உ.பி., மக்கள்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
15-ஏப்-202009:15:34 IST Report Abuse
hasan மண்டை ஓடு , அபாயம்
Rate this:
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
15-ஏப்-202005:21:00 IST Report Abuse
Dr.T.Senthilsigamani சபாஷ் ஆதித்யநாத்மிக நல்ல செய்தி கொரோனா வைரஸ், உ.பி., மாநிலத்தை ஆட்டிப் படைத்து வருகிற வேளையில் ,உபி முதலவர் யோகி ஆதித்யநாத் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தாக்கம் மட்டுப்படுத்தப்படும் .இப்போதாவது போலிமதச்சார்பின்மை பேசும் தமிழக கருப்பு தாலிபான் திக திராவிட கட்சிகள் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சிகள் ,குருமா ,நாம் டுமிழர் ,பொய்யம் கட்சி தலைவர்கள் இந்த செய்தியை படித்து திருந்தட்டும்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-ஏப்-202005:42:06 IST Report Abuse
Indhuindian He has unbelievable administrative skills. The way he handled the goondas chasing them sent shivers through the spine of goondaism in UP. The way he organised the Prayag Kumbh mela was outstanding. People took him casually because of his saffron robes and his being a "Pujari" in a temple. Just recollect the Tamil saying -உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X