சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' புகட்டும் பாடம்!

Added : ஏப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கொரோனா புகட்டும் பாடத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அந்த நோய் பற்றி தெரிந்து கொள்வது நலம். இது, ஒரு தொற்று நோய். இந்த நுாற்றாண்டில், பாம்பு, வவ்வால் போன்ற உயிர்களின், மரபணு மாற்ற கலவை தான், இந்த வைரஸ்.உயிரினங்களான மனிதன், விலங்குகள் போன்றவை, தன் இனம் தழைக்க, திசுவில் உள்ள மரபணுவால் இனப்பெருக்கம் செய்கின்றன. நுண் கிருமிகளான பாக்டீரியா, வைரஸ் போன்றவை, தன் இனப்பெருக்கத்தை, உயிரிகளான மனிதன், விலங்குகளை தேர்ந்தெடுத்து பெருக்குகின்றன.

உயிரினங்களில் பல கிருமிகள், வைரஸ்கள், பல லட்சக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து, உயிரினங்களையும் வாழ விடுகின்றன. இதை, சாறுண்ணி என கூறலாம்; அண்டி பிழைப்பவை; உயிரினங்களுடன் சார்ந்து இருப்பவை. இனப்பெருக்கத்தோடு தன்னையும் வளர்த்து, வாழ்ந்து, தனக்கு இடம் கொடுத்த உயிரினங்களான மனிதனையும், விலங்குகளையும் வாழ விடுகின்றன.நம் அரசியல்வாதிகளை போல, நாட்டிலுள்ள எல்லாவற்றையும் கொள்ளை அடித்து, தான் மட்டும் வாழ்வது போல் அல்ல இவை. இந்த கிருமிகளில், மரபணு மாற்றம் ஏற்பட்டு, மற்ற பிராணிகளில் தொற்றி, தாக்கி, அந்த பிராணிகளை அழிக்கின்றன.உதாரணமாக, 13ம் நுாற்றாண்டில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு, மனித இனத்தை அழித்த கொள்ளை நோய், எலியிலிருந்து பரவிய தொற்று நோயான, பிளேக்!அந்த காலத்தில், வியாபாரத்திற்கும், படை எடுப்பதற்கும், சாரை சாரையாக மக்கள் செல்வர்.

மூன்று கோடி பேர் இறப்புகுடிக்க, குளிக்க, தண்ணீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை என்பதால், உடல் வலுவிழந்து இருந்ததால், பிளேக் நோய் பரவி, எல்லாரையும் தொற்றி, அந்த நுாற்றாண்டில், மூன்று கோடி பேர் இறந்தனர்.மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகளான லண்டன், பாரீஸ், கிரீஸ், ஜெர்மன் போன்ற நாடுகளில், பிளேக் பரவி, மக்களை கொன்று குவித்தது. இதை, கருப்பு மரணம் என்றனர். இந்த மரணம், இனம், மொழி, வேறுபாடுகளின்றி அனைவரையும் தாக்கியது.

பிளேக் என்றால் மரணம் என்று, மக்கள் ஓடி ஒளிந்தனர். பெரிய அளவில் கல்வி மற்றும் அறிவியல் அறிவு வளராத அந்த காலத்தில், பிளேக் நோயை, கடவுளின் கோபம் என்று கூறி, கை விரல்களை வெட்டுவது, மனிதனை காவு கொடுப்பது என்பன போன்ற கொடூர செயல்களும் அரங்கேறின.உலகம் முழுதும், 1348 முதல், 1356 வரை, ஏராளமானோரை கொன்று குவித்த பிளேக் நோய், முதல், 'பாண்டமிக்' என்று அழைக்கப்பட்டது. அதாவது, உலகம் முழுவதும் பரவியுள்ள முதல், பயங்கர ஆட்கொல்லி வைரஸ் நோயாக கருதப்பட்டது.பிளேக் நோய் தொற்றை தடுக்க பல ஆண்டுகளானது. மருந்துகள் இல்லாத அந்த காலத்தில், ஐந்து கோடி பேர், ஐரோப்பாவில் மட்டும் இறந்தனர். ஆசியா கண்டத்தில் இறந்தோர் கணக்கு தெரியவில்லை.இரண்டாவது பாண்டிமிக், உலகம் முழுதும் பரவிய, 'ஸ்பானிஷ் இன்புளூவென்சா புளூ!'இது, 1918 மார்ச் முதல், 1919 வரை, பறவைகளிடம் இருந்து, ஸ்பெயின் நாட்டில் தொற்றி, பிற நாடுகளுக்கு பரவியது.இந்த புளூ வைரஸ், காற்றில் பரவக்கூடியது. மூச்சுக் குழாயிலிருந்து வரும் காற்றின் மூலம் பரவும் தொற்று நோய். எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை எளிதில் தாக்கும். இது, 'எச் 1 என் 1 வைரஸ்' என, அழைக்கப்பட்டது.கடந்த, 1918 மார்சில், இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள், அமெரிக்காவின் பிளடெல்பியா நகரில் வந்து இறங்கினர். பெரிய அளவில், ராணுவ ஊர்வலத்தை அந்நகரின் தெருக்களில் நடத்தினர். அப்போது, அவர்களுக்கு, ஸ்பானிஷ் புளு தொற்று இருந்தது; அதை அறியாமல், ராணுவ வீரர்கள் ஊர்வலம் நடத்தினர்.அந்த ஊர்வலத்தை, ஒன்றரை லட்சம் அமெரிக்க மக்கள் கண்டு களித்தனர். அது தான், அந்த நோய் பரவிய முதல் இடம். பின், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பரவி, படிப்படியாக, 6.5 லட்சம் அமெரிக்கர்களை கொன்றது. உலகம் முழுதும், 10 கோடி மக்கள் மரணமடைந்தனர்.அந்த காலத்தில் இருந்த அறியாமை, விஞ்ஞான வளர்ச்சியின்மை போன்ற காரணங்களால், ஸ்பானிஷ் புளூ தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.மனித இனம் கண்ட, மூன்றாவது பயங்கர தொற்று நோய் கொரோனா. எனினும், அந்த காலம் போல இல்லாமல் இன்று, நிமிடத்திற்கு நிமிடம், உலகின் பல நகரங்களில் இருந்து, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாக உள்ளது.முந்தைய இரண்டு தொற்று நோய்களும் கற்றுக் கொடுத்த பாடங்கள் தான், கூட்டமாக சேர்ந்து நடமாடுதல் கூடாது என்பன போன்றவை. அதிலிருந்து நாம் கண்ட உண்மை, வீட்டில் தங்கியிரு, உன்னை நீயே தனிமைப்படுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்திக் கொள் என்பன.மரணம் எப்படி வருகிறது?வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள், மூக்கின் துவாரம் வழியாக, சுவாசக்குழாயை அடைந்து, நுரையீரலில் போய் தங்குகின்றன. மூச்சுக் குழாய்களின் உட்சுவர் மீது, கொரோனா வைரஸ் மேல் உள்ள, நெருஞ்சி முள் போன்றவற்றால் ஒட்டிக் கொண்டு, மூச்சுக் குழாய் உட்சுவர் திசுக்களை தாக்கி, நிறைய சளியை சுரக்கச் செய்து, சுவாசக் குழாயை அடைத்து விடுகிறது.இதன் காரணமாக, சுவாசத்திற்கு தேவையான பிராண வாயு, ரத்ததிற்குள் செல்ல முடிவதில்லை. இதனால், ரத்தத்திலுள்ள கரியமில வாயு அதிகமாகி, 'ஹைபாக்சியா' என்ற நிலை ஏற்படுகிறது. மேலும், ரத்தத்தில் அதிகமாக கரியமில வாயு இருப்பதால், சுவாசிப்பதில் செயலிழப்பு ஏற்பட்டு, மரணம் நிகழ்கிறது.இந்த விபரீத நிலையை தவிர்க்கத் தான், 'வென்டிலேட்டர்' கருவி பொருத்தி, நுரையீரலை செயல்படுத்தி, உயிர் பிழைக்க வைக்க முயற்சி நடக்கிறது. இது, இறுதிக்கட்ட செயல்பாடு.பெரும்பான்மையான வைரஸ்கள், மூச்சுக் காற்றில், தும்மும் போதும், இருமல் ஏற்படும் போதும் வெளிவரும் நீர்த்துளியில் பரவும்.வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து, அழுகிய, அழிந்த செல்களை ரத்தத்தில் கலக்கச் செய்து, உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும் சீரழித்து, மரணத்தை உண்டாக்குகிறது. இதை தடுக்க, இறைவனைத் தவிர வேறு யாராலும் முடியாது.இப்போது, நவீன மருத்துவ வசதிகள் உள்ளதால், மக்களை காப்பாற்ற முடியும். அதற்கு, மக்களின் முழு ஒத்துழைப்பும், உதவியும் தேவைப்படுகிறது; வியாதியும் பரவாமல் இருக்க வேண்டும்.'மக்கள் நலனுக்காக, மன்னர் நல்ல உத்தரவைப் போட்டால், அதை எதிர்ப்பவர்கள், கருங்காலிகள்' என்கிறார் சாணக்கியர்; இது உண்மை.கொரோனா தொற்று துவங்கிய சீனாவை விட, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற பணக்கார நாடுகளில் தான் உயிரிழப்பு அதிகம். இதற்கு காரணம், மக்கள் வெளியே வந்து, இஷ்டம் போல திரிந்தது தான்.எல்லா வணிகமும் முடங்கி விட்டதால், மக்களின் வருவாய், அரசின் வருவாய், தொழில் வருமானம் பாதித்துள்ளன. இந்த பிரச்னையை, பணக்கார நாடுகள் சரி செய்து விடும் என்று எண்ணாதீர்கள். அங்கும், வேலையின்மை, வருமானமின்மை, வறுமை போன்ற கொடூரங்கள் நிகழக்கூடும்.மனிதன் தன் பேராசையால், தான் வசிக்க பெரிய மாளிகை, உயர் ரக கார், விமானம் வேண்டும் என எண்ணியவன், தற்போது முடங்கி விட்டான்; உயிருக்கு பயந்து பதுங்கியுள்ளான்.எனினும், தமிழகத்தில் மட்டும் ஜாதி வெறியர்களும், மதவாதிகளும் இன்னும் அடங்கவில்லை. அரசின் சேவைகளை எதிர்த்து, இத்தகையோர் பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது.நம்பிக்கையுடன் காத்திருப்போம்ஊரடங்கு உத்தரவை, பிரதமர், மோடி அறிவித்தவுடன், மக்கள் சாரை சாரையாக, நகரங்களை விட்டு வெளியேறினர். இந்த காட்சிகளை மேல் நாட்டினர் பார்த்தனர். மேலை நாடுகளில், இதுபோன்ற பழக்கம் கிடையாது. இவ்வாறு, மொத்தம் மொத்தமாக ஒன்றாக கூடி சென்றது தான், தற்போது கொரோனா தாக்கம் உக்கிரம் அடைந்திருப்பதற்கு காரணம் என்கின்றனர்.கொரோனாவால், நாட்டின் பொருளாதாரம் மிகவும் அதல பாதாளத்திற்கு சென்று விடும் என, சிலர் விமர்சனம் செய்து வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், அவர்கள் இந்திய மக்கள் தொகை, 130 கோடி மக்களில், 50 சதவீதத்தினர் இளைஞர்கள். இவர்கள் தான், இந்தியாவின் மூலதனம் என்பதை அறியவில்லை.இந்த, 50 கோடி இளைஞர்கள், நன்கு படித்த, உலக விபரமறிந்த வலிமை மிக்கவர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை, அந்த சிலர் அறிய வாய்ப்பில்லை. ஆகவே, நம்மால் முடியும்.இந்த தொற்று நோய்க்கு, சிகிச்சை அளித்து, நோயின் தீவிரத்தை தடுக்க, மக்களின் ஒத்துழைப்பு தேவை. விழித்திருந்து, தனித்திருப்பது தான், இப்போது இருக்கும் ஒரே தீர்வு.எனவே, கொரோனாவும் கடந்து போகும்; நம்பிக்கையுடன் காத்திருப்போம்; அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம்; இந்தியாவை மீண்டும் வலுவாக கட்டமைப்போம்!பேராசிரியர் டாக்டர் எஸ்.அர்த்தநாரிதொடர்புக்கு:இ - மெயில்: prabhuraj.arthanaree@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kabali - Madurai,இந்தியா
12-ஏப்-202018:41:57 IST Report Abuse
Kabali இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X