அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணையில்லா ஆட்சி; ஸ்டாலின் விமர்சனம்

Updated : ஏப் 12, 2020 | Added : ஏப் 12, 2020 | கருத்துகள் (125)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, Covid-19, Tamil Nadu govt, tn news, corona updates, coronavirus, திமுக,ஸ்டாலின்

சென்னை: ஏழை மக்களுக்கு உதவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது கருணையில்லா ஆட்சி நடப்பதை காட்டுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசு உத்தரவு:


ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொது மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி செய்ய நினைப்பவர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படியும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil newsஸ்டாலின் எதிர்ப்பு:


இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினால் நடவடிக்கை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தானும் செய்ய மாட்டேன்; மற்றவர்களையும் செய்யக் கூடாது என்பது இந்த ஆட்சியின் வஞ்சகம். கூட்டம் சேர்வதை ஒழுங்குபடுத்துவதைவிடுத்து, உதவியே செய்யக்கூடாது என்று எப்படி உத்தவிட முடியும்?

மக்களின் கண்ணீர் துடைக்க தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் முடியாது; தடுக்க நினைப்பது சர்வாதிகாரத்தனம். 'கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!' என்ற வள்ளலார் வார்த்தைகளால் எச்சரிக்கை செய்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ஏப். 15-ல் தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டம்கொரோனா தடுப்பு தொடர்பாக மத்திய ,மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தி.மு.க., சார்பில் ஏப். 15-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.mohan - coimbatore,அல்பேனியா
17-ஏப்-202021:47:54 IST Report Abuse
s.mohan அட கேடுகெட்ட ஸ்டாலின், கருணையை பற்றி யார் பேசுவது? முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் மு க வின் பிள்ளை அல்லவா நீ. இதுவும் பேசுவாய், இதற்கு மேலயும் பேசுவாய். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போது மு க என்ன செய்து கொண்டிருந்தார், இல்லை நீங்கள் தான் அன்றைய மத்திய அரசை (காங்கிரஸ் atchi) கண்டித்தீர்களா? கண்டும் காணாமல், மனிதாபிமானமே இல்லாமல், மௌனியாக இருந்தீர்களே. அப்பொழுது எங்கே போயிற்று உங்களது கருணை, பெயரில் (கருணா)இருந்தால் போதாது. அது உணர்வுப்பூர்வமாக உள்ளத்தில் இருந்து வரணுமப்பா. அதற்கு சுத்தமான இதயம் நல்லெண்ணெய் வேணும். போப்பா நீயெல்லாம் அரசியல் பண்ண வந்துட்ட.
Rate this:
Cancel
P.S.Balajrishnan - Salem,இந்தியா
13-ஏப்-202007:11:52 IST Report Abuse
P.S.Balajrishnan கருணாநிதியின் மகனே கருணை பற்றி கபடநாடகமாடி கள்ளத்தனமாக ஆட்சியை பிடிக்க அலைகிறாயே ஊரை சுரண்டி, நாட்டை சுரண்டி சம்பாதித்தது போதாதா ? ஓசி பிரியாணிக்கு ஊரை கொள்ளையடிக்கும் கயவர் கூட்ட தலைவா, சமூக சேவை என்று தறுதலைகளை அலையவிட்டு சூழ்ச்சி அரசியல் செய்ய 130 கோடி கொடுத்து கற்ற பாடமா இது உலகமே கலங்கி தத்தளிக்கும் இந்த நேரத்தில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் - எரிகிற வீட்டில் புடுங்குவது லாபம் என்று அரசியல் செய்யாதே. இது நாட்டு மக்களின் உயிர் பிரச்சனை. கண்ணியமாக செயல்படு. கள்ளத்தனம் செய்து சம்பாதித்ததை காப்பாற்றிக்கொள்.
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
13-ஏப்-202014:00:43 IST Report Abuse
சீனிசூப்பர். மூட்டை மூட்டையாக ரேசன் சர்க்கரை, அரிசி போன்றவைகளை ஊழல் செய்து விற்றுப்பிழைத்த அரக்கனுக்கு பிறந்த அரக்கன் சுடலை....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஏப்-202007:09:27 IST Report Abuse
Natarajan Ramanathan chenar - paris,பிரான்ஸ்....உங்கள் கருத்துபடி மோடியை பலர் திட்டினால் அப்போது அவர் செய்வதும் சரிதான் என்று ஆகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X