பிரதமர் நிவாரண நிதிக்கு எதிரான மனு :உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
SC, pm cares fund, PIL, supreme court, PM Modi, Modi, corona relief fund, coronavirus in India, fight against corona, India fights corona, கொரோனா, நிவாரண நிதி, பிரதமர், வேண்டுகோள், பொதுநல வழக்கு, அரசிதழ், நன்கொடை

புதுடில்லி : 'கொரோனா' நிவாரண நிதிக்கு, நன்கொடை வழங்கக்கோரி பிரதமர் வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை, இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, நன்கொடை வழங்க முன்வருமாறு, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம், கடந்த, 28ம் தேதி, கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், மக்கள் என பல தரப்பினரும், நன்கொடை அளித்து வருகின்றனர்.


latest tamil news
இந்நிலையில், நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கக்கோரி பிரதமர் வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா தாக்கல் செய்த அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடை வழங்குமாறு, இந்திய பிரதமர், மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்காக, தனி கணக்கும் தொடங்கப்பட்டது. எனினும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்படவில்லை.

ஆகையால், இதுவரை நன்கொடையாக வந்துள்ள நிதியை, இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். மேலும், இந்த பிரதமரின் நிவாரண நிதி அமைக்கப்பட்டது குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் எம்.எம்.சந்தானகவுடர் அடங்கிய அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் இன்று விசாரிக்க உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
13-ஏப்-202014:27:06 IST Report Abuse
Darmavan நீதிமன்றங்கள் இப்படி எல்லா வழக்கையும் ஏற்பது தடை செய்யப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-ஏப்-202014:21:08 IST Report Abuse
Darmavan நாட்டின் எல்லா பிரச்சனைகளும் ஏற்பவனுக்கு/ அதற்கு கண்டவனுக்கும் பதில் சொல்பனுக்கு துன்பமா,வெறுமனே கோர்ட்டில் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு காகிதத்தில் இதுவருக்கு கஷ்டமா அறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-ஏப்-202014:17:32 IST Report Abuse
Darmavan இது நிதி கொடுப்பவன் முடிவு .இதில் கொடுக்காதவன் கோர்ட்ல வழக்கு ஏன். கொடுப்பவன் பிரதமரை ஏற்று கொடுக்கிறான்.இவன் பிரதமரைவிட உயர்ந்தவனா .பிரதமர் பதவிக்கு என்ன மரியாதையை,நாட்டை அரசு ஆள்கிறதா கோர்ட் ஆள்கிறதா எதற்கெடுத்தாலும் கோர்ட் மூக்கை நுழைத்தால் அரசுக்கு என்ன அதிகாரம். ஒருஇரண்டு நீதிகள் 130 கோடி பிரதிநிதிகளை விட உயர்ந்தவர்களா. நம் சட்டத்தில் கோளாறு உள்ளது. அரசு தன் அதிகாரத்தை காட்டி இதை நிராகரிக்க வேண்டும்..
Rate this:
Rajas - chennai,இந்தியா
13-ஏப்-202014:45:51 IST Report Abuse
Rajasஉளறாதே. ஏற்க்கனவே பிரதமர் நிவாரண நிதி என்று ஒன்று இருக்கிறது. இது இப்போது தனியாக வேறு ஒன்று PM cares என்று ஆரம்பித்திருக்கிறார்கள். இது தான் வழக்குக்கு காரணம். பிரதமர் நிவாரண நிதி மற்றும் பிரதமர் பாதுகாப்பு நிதி என்ற இரண்டு நிதி அமைப்புகள் பல ஆண்டுகாலமாக இருந்து வருகின்றன....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X