மருத்துவப் பணியாளர்களை கவுரவப்படுத்திய கூகுள்

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிரமாக பணிப்புரியும் மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், கூகுள் தனது இணையதள முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.உலகம் முழுவதும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை தடுக்க அனைத்து நாடுகளும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க மருத்துவ
Google, Doodle, Medical Staff, healthcare workers, technology, coronavirus, covid 19, dinamalar news, கூகுள், டூடுல், மருத்தவப்பணியாளர்கள், கவுரவம்

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிரமாக பணிப்புரியும் மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், கூகுள் தனது இணையதள முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை தடுக்க அனைத்து நாடுகளும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க மருத்துவ பணியாளர்களும் போராடி வருகின்றனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து சேவை செய்து வரும் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோரை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் முன்னணி தேடுபொறி இணையதளமாக கூகுளும் மருத்துவப் பணியாளர்களை கவுரப்படுத்தியுள்ளது.


latest tamil news


கூகுள், தனது இணையதள முகப்பு பக்கத்தில் இன்று (ஏப்.,13) வெளியிட்ட டூடுலில் கொரோனாவை எதிர்த்து தீவிரமாக பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை கவுரப்படுத்தியுள்ளது. மாஸ்க், தலையுறை அணிந்த மருத்துவப் பணியாளரை போன்று வடிவமைக்கப்பட்ட டூடுல், அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆனால் இந்த டூடுல் ஆசியா மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே காணப்பட்டது. மற்ற நாடுகளில் மளிகை தொழிலாளர்களை கவுரப்படுத்திய டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஏப்.,6ம் தேதி, பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கும், ஏப்.,8ம் தேதி, அவசர சேவை ஊழியர்களுக்கும், ஏப்.,9ல், காவலர் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்களின் சேவைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக டூடுல் வெளியிட்டு கவுரப்படுத்தியிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
13-ஏப்-202016:10:59 IST Report Abuse
Sai தூய்மை பணியாளர்களையும் பாராட்டணும்
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
13-ஏப்-202013:28:20 IST Report Abuse
.Dr.A.Joseph பொதுமக்களை அடித்த காவல்துறையினரை (எல்லோரும் அல்ல) மட்டும் தவிர்த்து மற்ற எல்லா சேவை உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X