பொது செய்தி

இந்தியா

நாகாலாந்திலும் பரவியது கொரோனா

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020
Share
Advertisement
திமாபூர்: நாகாலாந்து மாநிலத்தில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 9152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273ல் இருந்து 308 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகாலாந்து மாநிலத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வராத
Nagaland, Coronavirus, First case, Covid-19, corona, coronavirus, corona update, corona cases, corona deaths, fight against corona,  நாகாலாந்து, கொரோனா, வைரஸ், முதல்நபர், பாதிப்பு

திமாபூர்: நாகாலாந்து மாநிலத்தில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 9152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273ல் இருந்து 308 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகாலாந்து மாநிலத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வராத நிலையில், முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்து மாநிலம் திமாபூரை சேர்ந்த நபர், கோல்கட்டா சென்று திரும்பியுள்ளார். கொரோனா அறிகுறியுடன் நேற்று (ஏப்.,12) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news



இந்நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். இதற்கிடையில், நாகாலாந்து அரசு, அந்த நபரின் குடியிருப்பு பகுதி மற்றும் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சீல் வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X