கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைப்பு ஒப்பந்தம்; முட்டிக்கொள்ளும் உலக நாடுகள்

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
crude oil, US, coronavirus, covid 19, crude oil price, crude oil news, corona, coronavirus in india, Opec

 கச்சா எண்ணெய், நாடுகள், போட்டி

நியூயார்க்: அமெரிக்காவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். வர்த்தகத் தலைநகரமான நியூ யார்க்கில் 83 லட்சம் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஒருபக்கம் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வு நடந்தபடி இருக்கிறது. மறுபக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமூக பரவலை தடுக்க டிரம்ப் அரசு போராடி வருகிறது. இதனிடையே அவ்வப்போது கருத்துமோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.


latest tamil news


கச்சா எண்ணை தயாரிக்கும் நாடுகளான ஈரான், ஈராக் உள்ளிட்டவை எண்ணை சப்ளையை குறைத்துவிட்டன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு அமெரிக்காவில் எரிபொருட்கள் கிடைக்காமல் பல தொழில்கள் முடங்கி உள்ளன. ஈரானில் இருந்து 9.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணை மட்டுமே தற்போது அமெரிக்காவுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால் அவசர சேவை ஊர்திகள் தட்டுப்பாட்டால் தவிக்கின்றன. ரஷ்யா, சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறைக்கப்பட்ட கச்சா எண்ணையை பெற சம்மதித்துள்ளன.


latest tamil news


முன்னதாக அமெரிக்காவுக்கு கச்சா எண்ணை நாடுகளில் இருந்து ஒரு நாளைக்கு 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணை அனுப்பப்பட்டது. அது தற்போது 10 ஒரு பங்காகக் குறைக்கப்பட்டதால் அமெரிக்க எண்ணை நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளன.


latest tamil news


வெறும் 23 அமெரிக்க டாலருக்கு ஒரு பேரல் கச்சா எண்ணைய் தற்போது விற்கப்படுகிறது. இதன்காரணமாக உலக பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. கச்சா எண்ணெய் கட்டுப்பாடு குறித்து கடந்த ஒரு வாரமாக புடின், டிரம்ப், சவுதி இளவரசர் முகமது சல்மான் ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடினர். பின்னர் இந்த சப்ளை குறைப்பு ஒப்பந்தம் மூன்று நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. மெக்ஸிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மேனுவல் லோபஸ் இந்த கச்சா எண்ணைய் குறைப்பு ஒப்பந்தத்துக்கு உடன்படாதது டிரம்புக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. ஆன்ட்ரஸுடன் டிரம்ப் உகலந்துரையாடி அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டுவதாக உறுதி அளித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 4 லட்சம் பேரல் கச்சா எண்ணெயதி இறக்குமதியைக் குறைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. அதிகபட்சமாக ஒரு லட்சம் பேரலுக்கு மேல் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியாது என மெக்ஸிகோ தெரிவித்துள்ளது. இது மற்ற நாடுகளை பாதிக்கிறது. தற்போது கொரோனா தாக்குதலால் ரஷ்யா ஓரளவு ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட சம்மதித்துள்ளது. கடந்த ஆண்டு முதலே ரஷ்யா எண்ணெய் சப்ளையை குறைப்பதற்கு சவுதி அரசிடம் முரண்டு பிடித்து வந்தது. இதனால் சவுதியில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இதனால் சர்வதேச பங்குச் சந்தை சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஏப்-202014:43:13 IST Report Abuse
 Muruga Vel ஈரானில் இருந்து 9.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணை மட்டுமே தற்போது அமெரிக்காவுக்கு விநியோகிக்கப்படுகிறது…..
Rate this:
Cancel
அக்பர் - Chennai,இந்தியா
13-ஏப்-202013:23:49 IST Report Abuse
அக்பர் குறை மாதத்தில் பெற்றெடுத்த குழந்தை போல உள்ளது
Rate this:
Cancel
Tamilan - kailasa,இந்தியா
13-ஏப்-202013:12:00 IST Report Abuse
Tamilan மிகவும் தவறான செய்தி.. உண்மை செய்தியை மட்டும் சொல்லுங்கள்.. ஈரான் இல் இருந்து அமெரிக்காவுக்கு எண்ணெய் செல்வது இல்லை.. உங்கள் அளவும் தவறு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X