பொது செய்தி

இந்தியா

நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (79)
Share
Advertisement

புதுடில்லி: 21 நாள் ஊரடங்கு நாளையுடன் நிறைவுபெறும் நிலையில் பிரதமர் மோடி நாளை ( ஏப்.14 ம் தேதி ) காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.latest tamil news
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . பலர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் , மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 25 ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் மாநில நிலவரம் அத்தியாவசிய பொருட்கள் சப்ளை ஆகியன குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த சனிக்கிழமை(ஏப்.,11) விவாதித்தார். இதில் பல முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்கவே தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.


latest tamil newsஇந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாகவே ஒடிசா, பஞ்சாப் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தன. இதனை தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா, மஹாராஷ்ட்டிர முதல்வர் உத்தவ்தாக்ரே ஆகியோரும், வரும் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளனர். மேற்குவங்கத்தில் வரும் ஜூன் மாதம் 10 ம் தேதி வரை பள்ளிகளை மூடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழக முதல்வர் இபிஎஸ்சும் ஊரடங்கை நீட்டிக்கவே விரும்புகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Johnny - Chennai,இந்தியா
14-ஏப்-202000:39:01 IST Report Abuse
Johnny Aiyya nalai Kalai adhey nerathil Ramayanam serial irukkiradhey. Nangal enna seivadhu
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
14-ஏப்-202000:32:58 IST Report Abuse
Abbavi Tamilan எத்தனை பேர் தங்கள் குடும்பத்தாரின் தங்க நகைகளை கொரோனா நிதிக்கு கொடுத்து இருக்கிறீர்கள்
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
14-ஏப்-202000:00:31 IST Report Abuse
Murthy Sound and Light over....what's next?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X