உலக நாடுகளிடமிருந்து சீனா கொரோனா குறித்த தகவலை மறைக்கப் பார்க்கிறதா?

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவின் இரு பல்கலை.,களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை மருத்துவ இதழ்களில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.



latest tamil news



கொரோனா வைரஸ் (கோவிட் 19) தோன்றியது குறித்த ஆய்வு முடிவுகளை மருத்துவ இதழ்களில் வெளியிட மேலும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவற்றை அரசின் பலகட்ட ஒப்புதல் இல்லாமல் வெளியிட கட்டாயத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்., மாதம் கோவிட்-19 குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளை சர்வதேச இதழ்களில் வெளியிட இந்த அளவு கட்டுப்பாடுகள் இல்லை என மருத்துவப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்துக்குப் பிறகே சீன அரசு கொரோனாவில் அகில உலக தாக்கத்தைப் பார்த்து இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜன., மாதம் இறுதிவரை கோவிட்-19 குறித்த ஆய்வுக்கட்டுரைகள் சீன மருத்துவ இதழ்களில் வெளிவந்துகொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீன சமூக வலைதளங்களில் கொரோனா குறித்த வதந்திகள் அதிக அளவில் உலா வருகின்றன. மருத்துவ இதழ்களில் கொரோனா குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியானால் பொய் செய்திகள் அதிகரிக்கும் எனப்படுகிறது. சீனா அரசின் இந்த முடிவு முக்கியமாக விஞ்ஞான ஆய்வுகளை தடுக்கும். மருத்துவ இதழில் பிரசூரிக்க முடியாமல் போனால் பல பல்கலைகளில் விஞ்ஞானிகள் சோதனை நடத்த தடை விதிக்கப்படும் என பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை என எதிர்கால சந்ததியினரை நம்பவைக்கும் வகையில் இந்த உத்தரவு சீன அரசால் போடப்பட்டுள்ளது. கொரோனா குறித்த எதிர்விளைவுகளை எடுத்துச் சொல்லும் எந்த ஆய்வுக்கும் இனி சீனா அனுமதி அளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதனை நிரூபிக்கும் வகையில் மார்ச் 2 அன்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மிலிட்டரி மெடிக்கல் சயின்ஸ் கல்லூரிக்கு வருகை தந்த சீன அதிபர் ஜி ஜிங்க்பிங் மருத்துவ இதழ்களில் கொரோனா ஆய்வை பிரசுரிக்கத் தடை விதித்துள்ளார். சீனாவின் பிரபல பல்கலைகளில் ஒன்று ஃபுடான் பல்கலை. இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சீன அரசு கொரோனா குறித்து ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க விதித்த கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட்டு இருந்தது. அந்த பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது ஏன் எனத் தெரியவில்லை. இதேபோல மற்றொரு பல்கலை இணைய தளத்திலும் அரசு அறிக்கை வெளியிடப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news



ஏற்கனவே சீனா உலக பொருளாதாரத்தை முடக்க கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது என்ற வதந்தி பரவி வருகிறது. கொரோனாவை முதன்முதலாகக் கண்டுபிடித்த சீன விஞ்ஞானி லீ வெலிங்யாங் தற்போது கொரோனாவால் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவரை பேசவிடாமல் பல வழக்குகளை போட்டு அவரை முடக்கியது. இதனைத் தொடர்ந்து சீனாவின் சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கும்போது சீனா உலக மீடியாக்களுக்குத் தெரியாமல் உண்மைகளை மறைக்கப்பார்க்கிறது என கூறப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-ஏப்-202019:59:37 IST Report Abuse
elakkumanan சீனா எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் உண்மையாக இருந்ததில்லை.....இது வரலாறு......இது புரியாதவர்கள் அல்லது புரியாதமாதிரி நடிப்பவர்கள் நமது உண்டியல்ஸ், திருட்டு குவளை கூட்டம், இத்தாலி செம்பூஸ் மற்றும் மோடி எதிர்ப்பு கும்பல்.......மற்ற உலகத்தினர் அனைவருக்குமே தெரிந்த உண்மை இது......................இது ஒரு நியூஸ் ஆ சார்.................சூரியன் கிழக்கே உதிக்கும்..........டீம்கா நாட்டின் சாபக்கேடு................கொண் கிராஸ் ஒரு கமிஷன் மண்டி.........உண்டீஸ் ஒரு எட்டப்பன் கூட்டம்............................இதெல்லாம் எல்லாருக்கேயுமே தெரிஞ்சதுதானே சார்..........................டுமீல் குப்பம் போதையில் (எச்ச குடி ) இருக்கும்வரை, இந்த உண்மை தெரியாதே....................................தமிழகத்தின் செய்திகள் ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு ஆதரவாக மாறிப்போய், ஏறத்தாழ இருப்பது ஆண்டுகள் ஆக்கிவித்தது....ஐயோ கொல்றாங்க ...எல்லாம் எப்பயோ பாத்தாச்சு.....போதையில் காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கிறது....தினமலர் ஒரு பாலைவன சோலை..........................கோமணம் கட்டிய ஊரில், வேட்டி கட்டிய தினமலர் ஒரு விதி விலக்கு.....தினமணியும் ஒரு ஒளி விளக்கு........இதெல்லாம் சுய நினைவோடு, கண் பார்வையோடு இருந்தால் மட்டுமே தெரியும்....
Rate this:
Cancel
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
13-ஏப்-202019:54:43 IST Report Abuse
Yes your honor கொரோனா பரவ சீனாதான் காரணம் எனவே சீனா நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அமெரிக்கா மீசையை முறுக்கியவுடன், மற்ற நாடுகளும் இதேபோல் நஷ்ட ஈடு கேட்க ஆரம்பித்துவிடுமோ என்று சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப் பட்டிருக்கலாம். எது எப்படியோ, உண்மை ஒருநாள் வெளிவரத்தான் போகிறது.
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
13-ஏப்-202019:12:53 IST Report Abuse
Arasu முதலில்... சுட்டு கொலை செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X