அடங்காத ஊரு... ஊரடங்குனு பேரு!| Dinamalar

அடங்காத ஊரு... ஊரடங்குனு பேரு!

Added : ஏப் 14, 2020
Share
'கொரோனா' வைரஸ் பரவல் தொடர்பான செய்தி சேகரிக்க, முக கவசம் அணிந்து கொண்டு, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.கோவை, அவிநாசி ரோட்டில், சிட்ரா சிக்னல் செக்போஸ்ட்டில், அடையாள அட்டையை காட்டிய பிறகு, போலீசார் அனுமதித்தனர். மற்ற வாகனங்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தன.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, 'கொரோனா' பரவல் மூன்றாவது கட்டத்தை எட்டுவதற்கு நுாலிழை தான்
 அடங்காத ஊரு... ஊரடங்குனு பேரு!

'கொரோனா' வைரஸ் பரவல் தொடர்பான செய்தி சேகரிக்க, முக கவசம் அணிந்து கொண்டு, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.கோவை, அவிநாசி ரோட்டில், சிட்ரா சிக்னல் செக்போஸ்ட்டில், அடையாள அட்டையை காட்டிய பிறகு, போலீசார் அனுமதித்தனர்.
மற்ற வாகனங்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தன.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, 'கொரோனா' பரவல் மூன்றாவது கட்டத்தை எட்டுவதற்கு நுாலிழை தான் வித்தியாசம் இருக்குன்னு, 'ஹெல்த் டிபார்ட்மென்ட்' அதிகாரிங்க சொல்றாங்க. ஆனா, கண்ட காரணத்தை சொல்லிட்டு, ஏகப்பட்ட பேரு வெளியே சுத்திட்டு இருக்காங்களே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''மித்து, சேலத்துல வாரத்துல ரெண்டு நாள் மட்டும்தான், கடைக்கு பொருள் வாங்க வரணும்னு சொல்லியிருக்காங்க.
அதுவும், வசிக்கிற ஏரியாவுல இருந்து, 2 கி.மீ., சுற்றளவுக்குள் தான் பொருள் வாங்கணும். அடிக்கடி ரோட்டுல சுத்திக்கிட்டு இருந்தா, வாகனத்தை பறிமுதல் செய்றாங்க. அது மாதிரி, கடுமையா நடவடிக்கை எடுக்கணும். இல்லேன்னா, மூன்றாவது கட்டத்தை தொடக்கூடிய வாய்ப்பு இருக்கு,''''அக்கா, நீங்க சொல்றது வாஸ்தவம்தான்! இறைச்சி கடை செயல்படக்கூடாதுன்னு சாயாங்காலம் அறிவிப்பு வெளியிட்டாங்க; டுவிட்டரிலும் தட்டி விட்டாங்க.
நைட் நேரத்துல, ஒரு நாள் மட்டும் வச்சிக்கலாம்னு பின்வாங்கிட்டாங்க. எந்தவொரு அறிவிப்பா இருந்தாலும், தீர்க்கமா சிந்திச்சு, பின்வாங்காத அளவுக்கு செயல்படுத்தணும்,''''நீ சொல்றதும் சரிதான்,'' என்றபடி, ஹோப் காலேஜில் இருந்து வரதராஜபுரம் வழியாக சிங்காநல்லுார் நோக்கி ஸ்கூட்டரை செலுத்திய சித்ரா, இ.எஸ்.ஐ., மருத்துவமனையை பார்த்ததும், ''மித்து, இங்க 'அட்மிட்' ஆகியிருக்கறவங்க, 'எங்களுக்கு நோய் தொற்று இல்லை. தேவை இல்லாம அடைச்சி வச்சிருக்காங்க'ன்னு சொல்லி, மொபைல் போன்ல வீடியோ பதிவு செஞ்சு, நெருக்கமானவங்களுக்கு அனுப்பி வைக்கிறாங்களாம்.
''இந்த ஆஸ்பத்திரியில மட்டும், 150 டாக்டர், 250 செவிலியர், மூன்று 'ஷிப்ட்' முறையில் வேலை பார்க்குறாங்க. இவுங்க, மனஅழுத்தத்துல இருக்கறதுனால, நாலு நாள் வேலை பார்த்தா, ஒரு வாரம் 'ரெஸ்ட்' கொடுக்குறாங்களாம்,''''ஆர்.எஸ்.புரத்துக்காரங்க பீதியில இருக்கறதா கேள்விப்பட்டேனே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''அதுவா, டில்லி மாநாட்டுக்கு போனவங்க, திரும்பி வந்த விமானத்துல, ஆர்.எஸ்.புரம் பேமிலியும் பயணம் செஞ்சிருக்கு. ஊருக்கு திரும்பியதும், பக்கத்துல இருக்குற 'டிபார்ட்மென்ட்' ஸ்டோருக்கும் போயிட்டு வந்திருக்காங்க.
அதனால், அந்த ஏரியாக்காரங்க ரொம்பவே பயத்துல இருக்காங்க.''கார்ப்பரேஷன்ல இருந்து, அந்த ஏரியாவை 'சீல்' வச்சு, கிருமி நாசினி தெளிக்கிறாங்க. வீடு வீடா போயி, சளி, ரத்தம் பரிசோதனை செய்றாங்க,'' என்றாள் மித்ரா.''அப்படியா, சங்கதி,'' என்றபடி, திருச்சி ரோட்டில், சுங்கம் ரவுண்டானா கடந்து, அரசு மருத்துவமனை வழியாக, ஸ்கூட்டரை ஓட்டினாள் சித்ரா. அப்போது, 'கொரோனா தடுப்பு பணி, கோவை மாநகராட்சி' என, ஸ்டிக்கர் ஒட்டிய கார், அவர்களை கடந்து சென்றது.
''அக்கா, அந்த காரை கவனிச்சீங்களா, அது, ஆளுக்கட்சிக்காரர் கார்,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''மித்து, பொறுமையா இரு. எல்லா விஷயத்தையும் சொல்றேன். உணவு தயாரிக்கிறது; ஸ்டிக்கர் அச்சடிக்கிறது; டீ-சர்ட் தயாரிக்கறதுன்னு ஏகப்பட்ட வேலையை, ஒரு என்.ஜி.ஓ.,வுக்கு மாநகராட்சியில இருந்து பொறுப்பு கொடுத்திருக்காங்க.''அதிகாரிகள் தரப்புல இருந்து, யாருக்கெல்லாம் ஸ்டிக்கர் கொடுக்கச் சொல்றாங்களோ, அவுங்களுக்கு வாரி வழங்குறாங்க. ஆளுங்கட்சி கரைவேட்டிக்காரங்க பலரும், தங்களது கார்ல, கார்ப்பரேஷன் ஸ்டிக்கர் ஒட்டிட்டு, ஜாலியா நகர் வலம் வர்றாங்க,''''அப்ப, காய்கறி வாங்க வர்ற பொதுமக்கள் மட்டும், ரோட்டுல மணிக்கணக்குல காத்துக் கெடக்கணுமா என்ன?,'' என, பொங்கினாள் மித்ரா.''பொறுமையா இருப்பா, இன்னைக்கு காலையில, 10:00 மணிக்கு மறுபடியும் நம்ம பிரதமர், உரையாற்ற போறாரு.
நோய் தொற்று அதிகமா பரவி இருக்கற ஊர்கள்ல நடவடிக்கை கடுமையா இருக்கும்னு சொல்றாங்க,'''''ஏன்னா, ஸ்டேட் கவர்மென்ட் சொல்றதை நம்பாம, 'நிலைமை எப்படி இருக்கு'ன்னு, மாவட்ட நிர்வாகத்திடம், 'சென்ட்ரல் கவர்மென்ட்' ஒபீனியன் வாங்கியிருக்கு. ஊரடங்கை கடுமையா அமல்படுத்த அறிவுரை வழங்கியிருக்காங்க.
அதிவிரைவுப்படை போலீசை, முக்கிய பகுதிகள்ல நிறுத்தப் போறாங்களாம்,'' என்றபடி, ரயில்வே ஸ்டேஷன் வழியாக, கலெக்டர் அலுவலகம் வந்தாள் சித்ரா.''கார்ப்பரேஷன் சப்ஜெக்ட் ஏதுவுமே சொல்லலையே,''''கொரோனா பீதிக்கு மத்தியிலும், கார்ப்பரேஷன்ல இருக்கிற சில ஆபீசர்ஸ், கரன்சி லவட்டுறதுல சூராதி சூரர்களா இருக்காங்க.
வருவாய் பிரிவுல மண்டல பொறுப்புல இருக்கற ஒரு அதிகாரி, கரன்சி வாங்கிட்டு, பழைய தேதியிட்டு, வரி புத்தகம் கொடுக்குறாராம்,'' என்ற சித்ரா, ''அதெல்லாம் சரி, ரூரல் லிமிட்டுல இருக்கற ஒரு ஸ்டேஷன்ல, ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துற சாமியார் மேல, திருப்பூர் லேடி கேஸ் கொடுத்தாங்களாமே,''''அடடே, ஒனக்கும் தெரிஞ்சு போச்சா. சாமியார் மேல, பாலியல் புகாரும், ஒரு கோடி ரூபாய் பண மோசடி புகாரும் கொடுத்திருக்காங்க. இரு தரப்பையும் போலீஸ்காரங்க கூப்பிட்டு 'பேசிட்டு' இருக்காங்க; பல லகரம் கைமாறியிருக்கறதா சொல்றாங்க,'' என்றபடி, கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X