கடமையே கண்ணாக அதிகாரிகள்... ஊரடங்கிலும், அடம் பிடிக்கும் மக்கள்!| Dinamalar

'கடமை'யே கண்ணாக அதிகாரிகள்... ஊரடங்கிலும், அடம் பிடிக்கும் மக்கள்!

Added : ஏப் 14, 2020 | |
எவனோ... ஒருவன் வாசிக்கிறான்...! இருட்டில் இருந்து யாசிக்கிறேன்...,' என்ற ரிங்டோன், மித்ராவின், மொபைல் போனில் ஒலித்தது.எடுத்த பார்த்த அவள், ''ஹாய்... சித்துக்கா... நுாறு ஆயுசு. இப்பதான் நெனச்சேன். கரெக்டா, போன் பண்ணீட்டீங்க,'' என்றாள்.''பரவாயில்லையே. இந்த 'லாக்டவுன்' நேரத்திலும், என்னை நினைக்கறீயே, தேங்க்ஸ்டி. ஆமா, கலெக்டர் ஆபீச பார்த்தா, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
 'கடமை'யே கண்ணாக அதிகாரிகள்... ஊரடங்கிலும், அடம் பிடிக்கும் மக்கள்!

எவனோ... ஒருவன் வாசிக்கிறான்...! இருட்டில் இருந்து யாசிக்கிறேன்...,' என்ற ரிங்டோன், மித்ராவின், மொபைல் போனில் ஒலித்தது.எடுத்த பார்த்த அவள், ''ஹாய்... சித்துக்கா... நுாறு ஆயுசு. இப்பதான் நெனச்சேன். கரெக்டா, போன் பண்ணீட்டீங்க,'' என்றாள்.''பரவாயில்லையே. இந்த 'லாக்டவுன்' நேரத்திலும், என்னை நினைக்கறீயே, தேங்க்ஸ்டி. ஆமா, கலெக்டர் ஆபீச பார்த்தா, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்துற மாதிரி இருக்கு,'' என்றாள்.
''ஆஸ்பத்திரி, ரிலேஷன் டெத், கல்யாணம்னு, தினமும், 200 பேருக்கும் மேல, பலர் வந்து, 'பாஸ்' வாங்கறாங்க. காலையிலேயே வர்ற கூட்டம், சமூக இடைவெளியை பின்பற்றதே இல்லை. இதைப்பார்த்த அதிகாரிகள், அவர்களை மீட்டிங் ஹாலில், சமூக இடைவெளியுடன் உட்கார வச்சாங்களாம்,''''அப்ப.. கலெக்டர் ஆபீசை மொதல்ல கண்காணிக்கணும்போல,'' என்ற மித்ரா, ''துாய்மை பணியாளருக்கு புது சிக்கல் வந்திருக்காம்,''அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''என்னடி சொல்றே?''''ஆமாங்க்கா, கொரோனா பாதித்த பகுதியில, 'வீதிக்குள்ள வந்து நோய் பரப்ப வேண்டாம்; குப்பை வாங்க வராதீங்க'னு, சிலர் சண்டை போடறாங்களாம்.'''' குப்பை வாங்க போகலைன்னா, அதிகாரிங்க நடவடிக்கை எடுப்பாங்க; வீதிக்குள்ள போனா, வரவேணாம்னு துரத்தராங்க... நாங்க என்னதான் பண்றது'னு, துாய்மை பணியாளர்களும் கதிகலங்கி போயிருக்காங்க''''இப்படியும்மா, செய்வாங்க.
ரொம்ப கொடுமைடி. இதையெல்லாம் அதிகாரிங்க கேட்க மாட்டாங்களா?'' ஆதங்கப்பட்டாள் சித்ரா."அக்கா... கொரோனா பாதித்த பல பகுதியில் இப்படித்தான் நடக்குது. அதிகாரிகளும் கைய பிசையறாங்க,'' பதில் சொன்ன மித்ரா, ''கோழிப்பண்ணை ஊரில், அறிவு ஒளி தரும் பகுதியில, கஞ்சா, லாட்டரி, சூதாட்டம், என சட்ட விரோத செயல்கள் ஜோரா நடக்குதாம்,''''ஊரடங்கை பயன்படுத்தி, இப்படியும் பண்றாங்களா?''''ஆமாங்க்கா.. திருப்பூருக்கே இங்கிருந்துதான் போதை பொருள் சப்ளை ஆகுதுன்னா பார்த்துக்குங்க. அதுவும், நைட் டைம் பார்த்தா, 'மினி மும்பை' ஏரியா மாதிரி இருக்குதாம்.
அத விட கொடுமை, காலியா இருக்கற வீட்டோட பூட்டை ஒடச்சு சிலர், உள்வாடகைக்கு விட்டிருக்காங்களாம்,''''என்னடி சொல்றே?''''உண்மைதாங்க. இத்தனைக்கு காரணம் ஒரு அதிகாரியும், போலீசும் தானாம். மாசாமாசம், தவறாம வீட்டு வாடகைல ஒரு பங்கு வர்றதால யாருமே கண்டுக்கறது இல்லையாம்.
யாராச்சும் கம்ப்ளைன்ட் பண்ணினா, கஞ்சா விக்கறதா சொல்லி கேஸ் போட்டுடுவேன்னு போலீஸ் பயமுறுத்தறாங்களாம்,''''இதனால, நமக்கேன் வம்புன்னு, எல்லோரும் 'கப்சிப்'னு இருக்காங்களாம்,'' விளக்கினாள் மித்ரா.''எல்லோரும் ஒதுங்கி போறதாலதான், தப்பு செய்றவங்களுக்கு குளிர் விட்டுப்போகுது. இப்ப பாரு, பிளீச்சிங் பவுடரை அதிக விலைக்கு வித்து, கொள்ளையடிக்கிறாங்க,''''இதென்ன, எரியற வீட்டில், எடுக்குற வரைக்கும் லாபங்கிற மாதிரி,''''சொல்றேன் கேளு. கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கிராமப்புறங்களில், பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளித்தல் என வேலை ஜரூரா நடக்குது. இதில், ஒரு கும்பல் 20 ரூபாய் விலை கொண்ட ஒரு கிலோ பிளீச்சிங் பவுடரை, 60 ரூபாய்னு வாங்கி, பயன்படுத்தி வர்றாங்களாம்.
இந்த வித்தியாச தொகை எங்கு செல்கிறது என தெரியவில்லை,''''வேறெங்க போகும். அதிகாரிங்க பாக்கெட்டுக்குதான்,'' சொன்ன சித்ரா, ''கடைக்கு போறேன்னு சொல்லிட்டு, போய், ஒரு வீட்டுக்குள்ளயே சீட்டாடுறாங்களாம்?'' என கேட்டாள்.''ஆமாங்க்கா... போலீசாரின் கெடுபிடியை மீறியும், மளிகை கடை, மெடிக்கலுக்கு போறேன்னு சொல்லிட்டு வெளிய வர்ற ஆட்களில் சிலர், ஒரு இடத்தில் கூடி சீட்டு விளையாடுறாங்களாம்,''''அடக்கொடுமையே...''''புது பஸ் ஸ்டாண்ட் பக்கம், போயம்பாளையத்தில், ரெண்டு இடத்தில் நடந்த சீட்டாட்ட கும்பலை போலீசார் பிடிச்சு இருக்காங்க.
இதே மாதிரி பல பக்கம் நடப்பதால, போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும்,''''கரெக்டி... செஞ்சா நல்லாதான் இருக்கும். இல்லாட்டி, பொய் கணக்கு காட்டற மாதிரிதான் இதுவும் இருக்கும்,''''அது என்னங்க்கா, பொய் கணக்கு''''கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த, 200 போலீசாருக்கு கமிஷனர், ரெஸ்ட் கொடுத்திருக்காரு. வடக்கால உள்ள ஸ்டேஷன்களில் ரெஸ்ட் கொடுக்கறதில்லையாம். ஆனா, கமிஷனர் ஆபீசுக்கு அனுப்பற ரிப்போர்ட்டில் மட்டும், ரெஸ்ட் கொடுத்ததாக, பொய் கணக்கு காட்டுறாங்களாம்,''''இப்படியுமா... ரெஸ்ட் கொடுக்க வேண்டியதுதானே,'' என்ற மித்ரா,'' அக்கா... ஆர்வ கோளாறால் ஏற்பட்ட பிரச்னையால், டிரான்ஸ்பர் போட்டுட் டாங்க,'' புதிய தகவல் சொன்னாள்.
''எங்கடி?''''உடுமலை சப்-டிவிஷனில், கேரள பார்டர் ஸ்டேஷனில் உள்ள ஒருவர், போலீசார் உள்ள 'வாட்ஸ் அப்' குரூப்பில், கொரோனா பத்தி ஒரு தகவலை போஸ்ட் பண்ணினாராம். அதைப்பார்த்த எஸ்.பி., பயங்கர கடுப்பாகி, 'உறுதிப்படுத்தாத தகவலை எல்லாம் ஏன் போஸ்ட் பண்றீங்க'ன்னு, செம டோஸ் விட்டு, வேற ஸ்டேஷனுக்கு மாத்திட்டாங்களாம்,''''சரியான நடவடிக்கைதான். 'கவர்மென்ட்'டே சொல்லுது, வதந்தி பரப்பாதீங்கன்னு.
அதை போலீசே மீறலாமா?'' என்ற சித்ரா, ''கிராமங்களுக்கு, கிருமிநாசினி சரியா கொடுக்காம இருக்காங்களாம்'' சந்தேகம் கேட்டாள்.''உண்மைதாங்க்கா... நிறைய பேர் இதை சொல்லீட்டாங்க. கிருமிநாசினி மட்டுமல்ல, பிளீச்சிங் பவுடர், கிளவுஸ், மாஸ்க்... இப்படி பாதுகாப்பு உபகரணங்களை எதுவுமே ஒழுங்கா கொடுக்கறதில்லையாம். இதில, ஆச்சரியம் என்னன்னா, மாவட்ட அதிகாரியும் இந்த விஷயத்தை கண்டுக்காம இருப்பதுதான், அதிர்ச்சியாக இருக்குதுங்க்கா,'' என்றாள் மித்ரா.''மித்து, இதேபோல, லிங்கேஸ்வரர் ஊர் அதிகாரியும் எதையுமே கண்டுக்கறதில்லையாம்,''''யாருங்க்கா, அது, என்ன பிரச்னை?''''பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பொண்ணு, வேலை இல்லாததால், ஊருக்கு போக முடிவு செஞ்சு, நடந்தே அவிநாசி வரைக்கு வந்துட்டாராம்,''''பஸ் ஸ்டாண்டில், நடுராத்திரியில் அவரை பார்த்த போலீசார் விசாரிச்சு, ஜி.எச்.,சில் சேர்த்துள்ளனர். அடுத்த நாள், அந்த பொண்ணோட சொந்தக்காரங்க வந்து, கூட்டிட்டு போனாங்களாம். இதைப்பத்தி சொல்றதுக்கு, போலீஸ்காரங்க, போன் செஞ்சாங்களாம்,''''ஆனா, அவரு அட்டெண்ட் செய்யலையாம்.
நொந்து போய், அடுத்த அதிகாரிகிட்ட தகவல் சொன்னாங்களாம்,''''முக்கியமான இந்த நேரத்தில், இதுமாதிரி நடக்கிற அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தா மட்டுந்தான், மத்தவங்க சரியாவாங்க,'' என்ற மித்ரா, ''ஓ.கே.,ங்க்கா... எங்க எச்.ஓ.டி., கூப்பிடறாரு. அப்புறம் கூப்பிடறேன்,'' சொல்லி விட்டு, சித்ராவின் இணைப்பை துண்டித்து, அடுத்த லைனில்பேச ஆரம்பித்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X