பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட்' மீட்டர் அலட்சியம்: பாடம் கற்பித்த கொரோனா

Updated : ஏப் 15, 2020 | Added : ஏப் 15, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

சென்னை : வீடுகளில், 'ஸ்மார்ட்' மீட்டர்கள் பொருத்துவதில், மின் வாரியம் அலட்சியம் காட்டாமல் இருந்திருந்தால், தற்போது, ஊரடங்கு உள்ள நிலையிலும், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கு எடுத்திருக்க முடியும்.latest tamil news
தமிழகத்தில், வீடுகள் உள்ளிட்ட தாழ்வழுத்த இணைப்புகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் ஊழியர்கள் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள, மின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர். அதற்கு ஏற்ப, நுகர்வோர் கட்டணம் செலுத்துகின்றனர்.


மத்திய மின் துறை


latest tamil news


இதற்கு மாற்றாக, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துமாறு, மாநில மின் வாரியங்களை, மத்திய மின் துறை, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மீட்டர்கள், தொலைதொடர்பு வசதியின் வாயிலாக, அலுவலக, 'சர்வரில்' இணைக்கப்படும். அதில், மின் பயன்பாடு கணக்கு எடுக்க வேண்டிய தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றப்படும். குறித்த தேதி வந்ததும், மென்பொருள் தானாகவே செயல்பட்டு, கட்டண விபரத்தை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கும்.குஜராத் உட்பட, பல மாநிலங்களில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தமிழக மின் வாரியம், அத்திட்டத்தை செயல்படுத்தாமல், அலட்சியம் காட்டியது.


ஊரடங்கு


நீண்ட இழுபறிக்கு பின், தற்போது, சென்னை, தி.நகரில், அந்த மீட்டர் பொருத்தும் பணி துவங்கி உள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 25ல் இருந்து, மே, 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த தேதியில் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், முந்தைய மாத கட்டணத்தை செலுத்தலாம்; அவ்வாறு செலுத்திய கட்டணம், பின் வரும் மாத கட்டணத்தில் சரி செய்யப்படும் என்றும், மின் வாரியம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே, ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தி இருந்தால், தற்போது, ஆளில்லாமல் மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கு எடுத்து, அதற்கு உரிய கட்டணம் செலுத்த, அவகாசம் வழங்கி இருக்கலாம். இதனால், குளறுபடிகள் ஏற்படாது.எனவே, ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதும், இனியாவது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை துரிதகதியில் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஏப்-202017:11:31 IST Report Abuse
Sampath Kumar நம்ம ஆளுக பட்டாலும் திருந்த தா ஜென்மம்
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
15-ஏப்-202020:24:04 IST Report Abuse
ocean kadappa india பிப்ரவரி மின்கட்டணம் அதிகமாக இருந்து ஏப்ரல் கட்டணம் கம்மியாக இருந்தால் அடுத்து வரும் மாத மின் கட்டணத்தில் சரி செய்யலாம் என்று சொல்கிறார்கள். . ஆனால் பிப்ரவரி மாதம் குறைந்தமின் கட்டணம் .ஏப்ரல் மாதம் அதிக மின் கட்டணம். வித்தியாச கட்டணத்தை வாங்காமல் விடுவார்களா..
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
15-ஏப்-202015:59:53 IST Report Abuse
S.Ganesan எங்கள் பகுதியில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது . இவர்கள் அதை சரிவர சர்வர்களில் இணைக்கும் வரை ஒரு பிரயோசனமும் இல்லை. இன்னமும் ஒருவர் வந்து கணக்கெடுக்கும் பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார். இம்முறை போன மாதம் செலுத்திய கட்டணத்தையே செலுத்தும்படி செய்துளார்கள்.மேலும் சர்வர்களில் இணைக்கும் பட்சத்தில் மாதா மாதம் பில் கட்டி விடலாம். இப்போது இரண்டு மாதங்களுக்கு சேர்த்து பார்ப்பதால் யூனிட்கள் அதிகமாகி அதிக கட்டணம் செலுத்தும்படி உள்ளது.மாதம் தோறும் செலுத்தும் போது கட்டணம் குறைய வாய்ப்புண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X