பொது செய்தி

தமிழ்நாடு

ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி: மாவட்ட அரசு ஹாஜி கோரிக்கை

Added : ஏப் 15, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட, அரசு ஹாஜி முகம்மது கிபாயதுல்லா, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அரசால் வழங்கப்படும் அரிசி, எங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே, தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை, நாங்களே ஜமாஅத் மூலமாக வீடுகளுக்கு வினியோகம் செய்து விடுகிறோம். அல்லது நாங்களே, நோன்பு கஞ்சி தயாரித்து வீடுகளுக்கு அனுப்பி, மக்கள் மசூதிகளுக்கு வருவதை தவிர்த்து விடுகிறோம். எனவே, ரம்ஜான் நோன்புக்காக வழங்கும் அரிசியை எங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கோரியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X