சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

ஸ்டாலினும், கமலும் தமிழகத்துக்கு வேண்டாம் இனி!

Updated : ஏப் 16, 2020 | Added : ஏப் 15, 2020 | கருத்துகள் (396)
Share
Advertisement
டாக்டர்களும், செவிலியர்களும் படும் பாட்டைச் சொல்லி மாளவில்லை. தன் உயிரையும் காக்க வேண்டும்; பிறர் உயிரையும் காக்க வேண்டும்; குடும்பம், குழந்தை என, யாரையும் பார்க்க முடியாத நிலை. சரியான நேரத்தில் உணவு கூட உண்ண முடியாத நிலை அவர்களுக்கு!போலீசாரையும் பார்த்தால் மிகவும் பரிதாபமாக உள்ளது. சுற்று முறையில் பணி செய்தாலும், வேகாத வெயிலில் நின்று, சாலையில் திரிவோரை, 'பெண்டு'
coronavirus,corona, stalin,m.k.stalin, kamal, kamalhasan,  கொரோனா, கொரோனாவைரஸ், ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், கமல், கமல்ஹாசன்

டாக்டர்களும், செவிலியர்களும் படும் பாட்டைச் சொல்லி மாளவில்லை. தன் உயிரையும் காக்க வேண்டும்; பிறர் உயிரையும் காக்க வேண்டும்; குடும்பம், குழந்தை என, யாரையும் பார்க்க முடியாத நிலை. சரியான நேரத்தில் உணவு கூட உண்ண முடியாத நிலை அவர்களுக்கு!

போலீசாரையும் பார்த்தால் மிகவும் பரிதாபமாக உள்ளது. சுற்று முறையில் பணி செய்தாலும், வேகாத வெயிலில் நின்று, சாலையில் திரிவோரை, 'பெண்டு' எடுப்பது எவ்வளவு சிரமம்!நிறைய போலீசார், தங்களால் இயன்ற உதவிகளைப் பொதுமக்களுக்குச் செய்து வருவதையும் கண்கூடாகக் காண முடிகிறது;

இவர்களுக்கும், ஆதரவற்றோருக்கும் சோறு கொடுக்க நிறைய பேர் முன்வருகின்றனர். ஆனால், இப்படிப்பட்ட தன்னார்வலர்களை, மாநில அரசு தடுத்து நிறுத்துகிறது.இதைக் கேள்விப்படும்போது, மாநில அரசு, எந்த முடிவையும் தீர்க்கமாக யோசித்து எடுப்பதில்லையோ எனத் தோன்றுகிறது. எவ்வளவோ இடர்பாடுகளை, நாம் பார்த்துள்ளோம்; இந்தந்த பிரச்னைக்கு, இப்படி இப்படி தீர்வு என்பதையும் உணர்ந்துள்ளோம்!இப்போதைய பிரச்னையில், கூடுதலாக, யாரும், யாரையும் தொடக் கூடாது; நெருங்கக் கூடாது; ஒரு இடத்தில் கை வைக்கும்போது, கவனத்துடன், அவசியமா, இல்லையா என்பதை உணர்ந்து, கை வைக்க வேண்டும்; அப்படியே வைக்க நேரிட்டாலும், கிருமி நாசினியால் சுத்தம் செய்து விட வேண்டும்; அவ்வளவே!

உலக அளவிலும், நாடு அளவிலும், மாநில அளவிலும் அரசுகள் அறிவுறுத்திய விஷயங்களிலிருந்து, இப்படி மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தாண்டியும் பிரச்னை உள்ளது; சிக்கல் உள்ளது என அரசுகள் கருதினால், அதை, பொதுமக்கள் மனதில் நன்கு ஏறும் வகையில், ஆணித் தரமாக உணர்த்த வேண்டும்.அதை விடுத்து, 'தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்' என்ற கெஞ்சுவதால், தற்போதைய நிலையிலிருந்து எந்த மாற்றத்தையும் அரசுகள் காண முடியாது. வெளியில் வந்தாலே கிருமி தொற்றும் என்பது தான் உண்மை எனக் கருதினால், உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைப்பதில் தவறே இல்லை.'மக்கள் பீதி அடைவர்; பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டினால், மாநிலத்தின் கவுரவம் பறி போகும்' என்றெல்லாம் எண்ணிக் குழம்பித் தவிக்க வேண்டாம். உள்ளது உள்ளபடி நடக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

நிலைமைகள் இப்படி தாறுமாறாய் கிடக்க, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் அலம்பலைக் கண்டால், வயிறு எரிகிறது. இப்போதைய அவசர நிலையில், அரசியல் கட்சியினர் என்ன செய்ய வேண்டும்... எதிர் பேச்சே பேசாமல், 'கவலைப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம்; என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம்' என, அரசுடன் கைகோர்த்துப் பணியாற்ற வேண்டும்.அதை விட்டு விட்டு, தங்களுக்கே உரிய மூன்றாம் தர சிந்தனையுடன், அரசை குறை சொல்லித் திரிகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தனக்கே உரிய பாணியில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுடன், 'உரை'யாடுகிறார்.

போட்டோவுக்கு, 'போஸ்' கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், கையில் கிளவுஸ் போட்டு, மக்களுக்கு உணவு கொடுக்கிறார்.மூத்த டாக்டர்கள் இவரிடம் பேசினார்களாம்... 'நோயின் அறிகுறிகள் இல்லாமலேயே, நோய் கிருமிகளை சுமந்தபடி மற்றவர்களுக்குப் பரப்புவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்' எனக் கூறினராம். உடனே, இவர், அரசிடம் நேரடியாக பேசாமல், 'அட்வைஸ்' செய்து அறிக்கை விடுகிறார். என்னே இவரது அக்கறை!பொருட்கள் விலையெல்லாம் ஏறி விட்டதாம்; அரசு நடவடிக்கை எடுக்கவில்லையாம். கொரோனாவுக்கு, தனியார் மருத்துவமனைகள் இலவசமாய் பரிசோதனை செய்யணுமாம்.எப்படி... எல்லாமே, வீட்டிலிருந்தபடியே அறிக்கை! கூடவே மறக்காமல், 'அரசியல் செய்யும் நேரம் இல்லை இது... செயல்படாத அரசை செயல்பட வைப்போம்' என்கிறார்.

டுவிட்டரில், கிஷோர் கே.சுவாமி என்பவர், இவரை சற்று அதீதமாகத் திட்டுகிறார். இப்போதைய ஸ்டாலினின் நடவடிக்கைகளைப் பார்த்தால், அந்தத் திட்டுகள் சரி தானோ என்று தோன்றுகிறது. மக்களைக் காக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால், இது போன்ற, 'அறிக்கை அரசியலை' ஸ்டாலின் மேற்கொள்ள மாட்டார்; இவரது ஒரே எண்ணம், கொரோனாவைப் பகடையாக வைத்து, அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான்!

இவராவது எதிர்க்கட்சித் தலைவர் என்ற மதிமயக்கத்தில் இப்படிச் செய்கிறார்; இதற்கு மேல் செயல்பட இவருக்குத் தெரியாது என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.இன்னொருவர் இருக்கிறாரே... செந்தமிழ்ப் புலவராம், கமல்ஹாசன்... வீட்டிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து, செந்தமிழ் இவரிடம் என்னமாய் பூந்து விளையாடுகிறது தெரியுமா! ரொம்ப யோசிக்காதீங்க... வழக்கம் போல இவர் சொல்வது இவருக்கே புரியாது! அவை எல்லாவற்றையும் எழுதி இந்த இடத்தை வீண் செய்ய விரும்பவில்லை.

சாம்பிளுக்கு ஒன்றே ஒன்று...அண்டை மாநிலங்கள் சில, 'கோவிட் 19' உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப் பலரின் உதவியை நாடிப் பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டி விடுகிறது. வேலை தெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்கள்!- ஐந்து நிமிடம் படித்தால் தான், இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியும்.அரசின் உதவி சரியாகச் சென்று சேரவில்லை என, இவர் களம் இறங்கினாராம். அது பொறுக்காமல், அரசு, தன்னார்வலர்களுக்கு உணவு கொடுக்க தடை விதித்து விட்டதாம். இவர் படத்தின் ஷூட்டிங்கில், கிரேன் விழுந்து சிலர் இறந்து போன நேரத்தில், இவருக்கு முன்யோசனை தோன்றி, எல்லா கருவிகளும் சரியாக இருக்கிறதா என்று, கவனித்திருக்கலாமே!

ஒரு வேளை, இவருடைய மூளையின் முன்னெச்சரிக்கைத் தகவல், அந்த கிரேனுக்குச் சென்று சேரவில்லையோ!எல்லாவற்றுக்கும் மேலாக, கேரள அரசையும், அதன் போலீசாரையும் பாராட்டி, கடிதம் எழுதி இருக்கிறார். என்னே இவரது தமிழக பற்று! இவருக்கு காய்ச்சல், தலைவலி வந்தால், கேரளா சென்றா சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்? நம் மருத்துவர்கள் இங்கே என்ன, கல்லாங்காயா விளையாடிக் கொண்டிருக்கின்றனர்? இவருக்கு ஒரு பிரச்னை என்றால், நம் போலீஸ் தானே, பாதுகாத்து அரவணைக்கிறது? இந்த அடிப்படை நன்றி கூட இவரிடம் இல்லையே?எவ்வளவு பெரிய இடர்பாட்டில் சிக்கி இருக்கிறோம்!

ஏற்கனவே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களின் வாழ்வு, இவர்களின் காழ்ப்புணர்ச்சி அரசியல் காரணமாக, மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் நிலைக்கு தான் தள்ளப்படுமே தவிர, எந்தத் தீர்வும் ஏற்படாது.ஸ்டாலின், கமலிடம் ஒன்றைக் கேட்டுக் கொள்கிறேன்... 'லெட்டர்பேடு' கட்சிகளை விட கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் உங்களால், உருப்படியான காரியம் எதையுமே செய்ய முடியாது; வாய் மூடி ஒதுங்கி நில்லுங்கள். இது தான் நீங்கள் இப்போதைக்கு, மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டு!


latest tamil news
பா. பரத்வாஜ்,

சமூக நல விரும்பி,

email: conveybharad@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (396)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayon - Kajang,மலேஷியா
17-ஏப்-202007:51:14 IST Report Abuse
Mayon ஒரு தரப்பு சார்புக்கு எடுத்துக் காட்டு.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-ஏப்-202006:56:18 IST Report Abuse
skv srinivasankrishnaveni மக்களே நம்மளுக்கு கமலும் வேண்டாம் ரஜினியும் வேண்டாம் சுடாலின் அண்ட் அவா கட்ச்சி வேண்டவே வேண்டாம்
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
16-ஏப்-202023:50:56 IST Report Abuse
David DS நான் எந்த விதத்த்திலும் சுடாலின் கமல் இருவரையும் ஆதரிக்கவில்லை/
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X