'அப்பா இல்லாமல் தவிக்கிறோம்' லாலு மகன் வெளியிட்ட 'வீடியோ'

Updated : ஏப் 16, 2020 | Added : ஏப் 16, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
coronavirus, corona, covid 19, politics, lalu prasad yadav, Tej Pratap Yadav, லாலு, மகன், வெளியிட்ட, 'வீடியோ'

பாட்னா :கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை நினைத்து அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜார்கண்ட் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் சிறை கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோல் சிறையில் இருக்கும் லாலுவும் விடுவிக்கப்பட்டு வீடு வந்து சேருவார் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


latest tamil news




இந்நிலையில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தன் தந்தையின் பிரிவை 'வீடியோ' மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் 'அப்பா எங்களுக்கும் பீஹார் முழுவதற்கும் நீங்கள் தேவை. நீங்கள் இல்லாமல் தவிக்கிறோம்' என பதிவிட்டுள்ளார்.லாலுவின் உடல்நிலை குறித்து கவலைப்படும் அவரது குடும்பத்தினர் வைரஸ் பாதிக்காமல் இருக்க அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஏப்-202017:19:43 IST Report Abuse
Endrum Indian அப்போ ஜாமீனில் வெளியே வந்து இவ்வளவு நாள் உலாவியது பின்னேயும் உள்ளே போயாச்சா??சிறையிலிருந்து வெளியே வந்தால் கொரோனா தொற்று தன்னை நிச்சயம் தாக்கும் என்று பயந்து சிறையிலிருந்து வெளியே வரவேயில்லை, இப்போ ஜாமீன் அவசியமேயில்லை???என்ன லல்லு சரிதானே
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஏப்-202017:11:17 IST Report Abuse
Endrum Indian அப்போ ஜாமீனில் வெளியே வந்து இவ்வளவு நாள் உலாவியது பின்னேயும் உள்ளே போயாச்சா??சிறையிலிருந்து வெளியே வந்தால் கொரோனா தொற்று தன்னை நிச்சயம் தாக்கும் என்று பயந்து சிறையிலிருந்து வெளியே வரவேயில்லை, இப்போ ஜாமீன் அவசியமேயில்லை???என்ன லல்லு சரிதானே
Rate this:
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
16-ஏப்-202017:06:32 IST Report Abuse
தங்கவேல்  தீவினம் இல்லாது மாடுகள் கூட கஷ்டப்பட்டிருக்குமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X