இந்தியாவில் தொழில் துவங்க தென் கொரியா நிறுவனங்கள் விருப்பம்

Updated : ஏப் 16, 2020 | Added : ஏப் 16, 2020 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை: சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் செயல்படும் தென் கொரிய நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் துவங்க விரும்புகின்றன.இது தொடர்பான பல கோரிக்கைகள், சென்னையில் உள்ள தென் கொரிய தூதரக அலுவலகத்திற்கு வந்துள்ளன. இதில் சில ஆரம்ப நிலையில் உள்ளது. மற்றவை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளன.தென் கொரிய தூதரகத்தில்
south korea, south korea coronavirus, business news, china, india, south korean company,
தென்கொரியா, நிறுவனங்கள், சீனா, இந்தியா, விருப்பம், வர்த்தகபோர், சென்னை

சென்னை: சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் செயல்படும் தென் கொரிய நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் துவங்க விரும்புகின்றன.இது தொடர்பான பல கோரிக்கைகள், சென்னையில் உள்ள தென் கொரிய தூதரக அலுவலகத்திற்கு வந்துள்ளன. இதில் சில ஆரம்ப நிலையில் உள்ளது. மற்றவை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளன.தென் கொரிய தூதரகத்தில் பணிபுரியும் யுப் லீ என்ற அதிகாரி கூறுகையில், இரண்டு இரும்பு தொழிற்சாலைகள், சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் சேவைத்துறையை சேர்ந்த நிறுவனம் ஒன்று சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தொழில்துவங்க விரும்புகின்றன. போஸ்கோ மற்றும் ஹூண்டாய் எக்கு தொழிற்சாலை, ஆந்திராவில் தொழிற்சாலை அமைப்பதை இந்தய அரசு எதிர்பார்க்கிறது.


ஆந்திராவில் எக்கு தொழிற்சாலை அமைக்க, துறைமுக வசதியுடன் கூடிய 5 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. முதலீடு செய்ய வேண்டும் என அந்த நிறுவனங்கள் முடிவெடுத்த உடன், ஆந்திராவில் தொழிற்சாலை துவங்கப்படும். இந்தியாவில், தொழில்துவங்க இன்னும் தென்கொரியாவை சேர்ந்த சில நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், கொரோனா காரணமாக அது தள்ளி போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.latest tamil news


கொரோனா பாதிப்பை தொடர்ந்து, சீனாவில் செயல்படும் ஜப்பான் நிறுவனங்கள் வெளியேற திட்டமிட்டுள்ளன. இதற்காக அந்தநிறுவனங்களுக்கு ஜப்பான் அரசு நிதியுதவி அளிக்க உள்ளது.


இது தொடர்பாக எச்டிஎப்சி வங்கி சேர்மன் தீபக் பரேக் கூறுகையில், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் வியட்நாம், தாய்லாந்து செல்வதற்கு பதில், இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான வழிகளை நாம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

adithyan - chennai,இந்தியா
16-ஏப்-202019:41:55 IST Report Abuse
adithyan தமிழ்நாட்டுக்கு மட்டும் வந்திடாந்திடாதீங்க. இங்கே உள்ள அருணன், முத்தரசன், பாலகிருஷ்ணன்,சீமான், வேல்முருகன், துரை முருகன் ஆகியோர் உங்களை பிடுங்கி தின்று விடுவார்கள்.பேசாம, தமிழ்நாடு,கர்நாடக,தமிழ்நாடு ஆந்திரா எல்லை ஓரம் கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் அமைத்துகொள்ளங்கள்.
Rate this:
Cancel
16-ஏப்-202019:30:09 IST Report Abuse
நக்கல் அய்யா, நிறைய வேலை வருது, நிறைய வேலை வருது, சிவப்பு கொடியை தூக்க நிறைய வேலை வருது.... கம்மிகளைவிட இந்த செய்திக்கு ஆனந்தப்படுபவர்கள் யாரும் இருக்க முடியாது...
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
16-ஏப்-202019:26:19 IST Report Abuse
W W நம்மால் பஜ்ஜி, போண்டாவை,குவாட்டர் தவிர ஒரு மோபைல் டிவி எல் ஈடி சிகிரீன் தயார் செய்ய முடியுமா ? ,இவையெல்லாம் நம் இன்னும் வெளிநாட்டையா நம்பி இருக்கிரோம்,ஏன் எனில் அவை யாவும் நம் உண்டாக்குவதை வீட சீப்பாக கிடைப்பதால் தான் .இனியாவது சீனாவை நம்பாமல் நாமே அதனை இங்கு உற்பத்தி செய்ய வேண்டும்.நமக்கு எல்லாமே இருக்கு அதனை இனியாவது நல்ல முறையில் பயன் படுத்தி 100% தன்னிறைவை கொண்டு வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X