சென்னை: ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகிக்க, தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஊரடங்கு நாட்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக வழங்க தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனை எதிர்த்து திமுக, காங்., மதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழஙக்கு தொடரப்பட்டது. தனியார் தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் நிவாரண உதவிகளை வழங்க தடை விதித்ததாக தவறான கூறுவதாகவும், அரசு நடவடிக்கைகளுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கும் கற்பிக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில், கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஏப்.,16) விசாரணைக்கு வந்த வழக்கில், ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகிக்க வேண்டும் எனில் போலீசாருக்கு தகவல் கொடுத்தால் போதும், அனுமதி பெறவேண்டிய தேவையில்லை. ஆனால், விநியோகிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர், என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement