புதுடில்லி: பிரதமர் மோடியை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். பொருளாதார பாதிப்புகள் குறித்தும், அதனை சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், சிறுகுறு தொழில் துறையினருக்கு சலுகை அளிப்பது மற்றும், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து துறைக்கு நிவாரணம் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.